Featured post

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests...

Wednesday, 21 September 2022

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு

 *மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு*


மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.



டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடன கலைஞர்களுடன் நடனமாடுவது பிரமிப்பாகவும், ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. மெகா ஸ்டார்கள், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருவரும் தனித்துவமாகவும், ஒப்பற்ற வகையிலும் நடனமாடியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.


பங்கி பீட்ஸ் எனும் ஒலிக்குறிப்புடன் இசையமைப்பாளர் எஸ். தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது, ரசிகர்களுக்கு இன்னிசை விருந்தாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவில் நடன காட்சிகளை உருவாக்கும் போது நடைபெற்ற சுவாரசியமான அம்சங்களை காட்சிப்படுத்தி இருப்பதும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. குறிப்பாக இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்களும் ஒரே வண்ணத்திலான ஆடையை அணிந்து நடனமாடியது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நட்சத்திர பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தன்னுடைய இனிய குரலால் இந்த பாடலை பாடி அசத்தியிருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர் ஆனந்த ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.


பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகிய இரண்டு மெகாஸ்டார்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.


'காட்ஃபாதர்' திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.


பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா திருவிழாவின்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


எழுத்து & இயக்கம் : மோகன் ராஜா

தயாரிப்பாளர்கள் : ஆர். பி. சௌத்ரி & என். வி. பிரசாத் 

வழங்குபவர் : கொனிடேலா சுரேகா

தயாரிப்பு நிறுவனங்கள் : கொனிடேலா புரொடக்ஷன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்

இசை : எஸ். எஸ். தமன்

ஒளிப்பதிவு : நீரவ்ஷா

கலை இயக்குநர் : சுரேஷ் செல்வராஜன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : வக்காதா அப்பாராவ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்


Telugu - youtu.be/hrKlzAgQQ-Q

Hindi - youtu.be/Z7cvANFjgrA

No comments:

Post a Comment