Featured post

#STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

 #STR49 Movie Launched with a Grand Pooja Ceremony! Kicking off with a grand pooja ceremony, the much-awaited film #STR49—starring the ever-...

Saturday, 24 June 2023

ராம்சரண் - உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு

 *ராம்சரண் - உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு*


*விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு*

''எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார். 

குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர். 






ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குழந்தை கடந்த இருபதாம் தேதியன்று பிறந்தார். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள். 


டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா, டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட  சிறந்த சிகிச்சையை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆதரவினை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது. 


மகள் பிறந்த செய்தியை கேட்டவுடன் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நிலையான ஆதரவையும், நிபந்தனையற்ற அன்பையும் செலுத்தி வரும் ரசிகர்கள்.. அதனை என்னுடைய மகளுக்கும் தருவார்கள் என நம்புகிறேன். 


என் மகளுக்கு அவள் பிறந்த தேதியிலிருந்து 21 ஆம் தேதியன்று பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். அவளுக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அது என்ன பெயர் என்பதனை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். 


எங்களுடைய குட்டி தேவதை வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். இந்த தருணத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனது மகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment