Featured post

Think Studios' next to be a fantasy romcom featuring actors Kavin, Priyanka Mohan

 *Think Studios' next to be a fantasy romcom featuring actors Kavin, Priyanka Mohan in the lead* Chennai, July 16 : The inaugural functi...

Saturday, 24 June 2023

சில கழிவுகள்

 சில கழிவுகள் 

****************

இறைவனை யாரும்

 இழிவு படுத்திவிட முடியாது!

அது

இறை நம்பிக்கையுள்ளவனை

இழிவுபடுத்துவதாகும்!


கடவுள் மனதை

துன்புறுத்திவிட 

யாராலும் முடியாது!

அது

கடவுள்

நம்பிகையாளனை

துன்புறுத்துவதாகும்!

 

இறைவனை

நம்பாதவன் 

நாத்திகப்பிறவி!

இறைவனை

இழிவு செய்பவன்

இழிபிறவி!


தெய்வத்தை

மலக்குழியில் இறக்கும் சிந்தனையுள்ளவன்

 மனிதத்திற்கு

அப்பாற்பட்டவனே


சாமியை

மலக்குழியில் மூடுபவன்

பக்திமானின் சிந்தையில் 

பிணத்திற்கு சமம்!


ஒரு மதத்தின் மீது

 வன்மத்தையும் வக்கிரத்தையும் வாந்தி எடுப்பவன்

 அவன் வாந்தியை

அவனே

 உண்டு வாழுவதற்கு சமம்!


உன் வீட்டு

மலக்குழி அடைபட்டால்

அந்தணர் வந்தால்தான்

சீராகுமா?

நீ!

உன் அப்பா!

உன் அம்மா!

உன் குடும்பத்தார்

கை பட்டால் சீராகாதா???


அந்தணன் கைக்குத்தான்

அந்த சூட்சுமம் தெரியுமா?

தேவர்

வன்னியர்

நாடார்

கவுண்டர்

இப்படி எத்தனையோ

ஜாதி இங்குண்டு

சமூக அக்கறை உண்டென்றில்

அவர்களையும் அழைக்கட்டுமே

உன் வீரக் குரல்!

திருப்பி அடிக்காதவனை

திரும்ப திரும்ப அடிப்பதுதானா

உங்களது வீரம்!

நாலுபேர் கைதட்டல்

வெறும் சத்தம்!

கோடிக்கணக்கானோர்

மனக் குமுறல்

சாபம்!


கடவுள் மனம்

மன்னித்து விடும்!

ஆனால் 

சாபம் 

பலித்துவிடும்! 

                       *பேரரசு*

No comments:

Post a Comment