Featured post

#STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

 #STR49 Movie Launched with a Grand Pooja Ceremony! Kicking off with a grand pooja ceremony, the much-awaited film #STR49—starring the ever-...

Saturday, 24 June 2023

இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன்

 இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர்  


ராவண தேசத்தில் நடைபெறும் கிரைம் திரில்லர் படம் “ இருளில் ராவணன் “


DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.


அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் துஷாந் 


பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்திற்கும் நடனம் அமைத்து வருகிறார்.


கலை இயக்கம் – மதன்

தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி

மக்கள் தொடர்பு – மணவை புவன்


தயாரிப்பு - DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் A.V.S.சேதுபதி.


படம் பற்றி இயக்குனர் A.V.S.சேதுபதி பகிர்ந்தவை...


முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இருவாக்கியுள்ளோம். வீழ்ந்த















வன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.


முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் A.V.S.சேதுபதி.

No comments:

Post a Comment