Featured post

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல்

 *ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!*  பாயல் கபாடியாவின் இயக்கத்தில், க...

Friday 3 November 2023

பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர்

 *பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தைப் பாராட்டியுள்ளார்!*




பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் ’பார்க்கிங்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள பாராட்டிற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்க படத்தினை பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் ‘பிளாக்பஸ்டர் இயக்குநரான’ லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’’பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம், ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது சகோதரர்களான சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.


ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.


‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

No comments:

Post a Comment