Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Tuesday, 2 January 2024

காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்

 *காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்* 








சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ஒரு காதல். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள்.


ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற படமாக்கி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


நடிகர்கள்


மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சுளா, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர்


தொழில் நுட்ப கலைஞர்கள்


தயாரிப்பு நிறுவனம் - சென்னை புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் - எழில் இனியன்

ஒளிப்பதிவாளர்கள்- ராஜதுரை MA., சுபாஷ் N மணியன்

இசை - ஜி கே வி

எடிட்டர் - ராஜ்குமார்

ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், பயர் கார்த்திக் 

டிசைனிங் - ரெடிஸ் மீடியா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மாஸ் ரவி

மக்கள் தொடர்பு - குமரேசன் பி.ஆர்.ஓ

No comments:

Post a Comment