Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Thursday, 25 January 2024

பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த

 பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு!





மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த FRIENDS FILM FACTORY & BUTTERFLY NETWORK இணைந்து நடத்திய BUTTERFLY CARNIVAL விழாவிற்கு வருகை தந்து உசிலம்பட்டி கிராம மக்களை சந்தோஷப்படுத்தி விருதுகள் வழங்கி ஊர் மக்களை மகிழ்ச்சியடைய செய்தார் இசையமைப்பாளர் D.இமான். 


அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தைப்பூச திருநாளில் இயக்குநர் ராஜேஷ்.M, பொன்ராம், செல்லாஅய்யாவு, குருரமேஷ், ஆனந்த் நாராயண், M.P.கோபி ஆகிய 6 இயக்குநர்கள் சேர்ந்து ஆறு படை முருகனை வேண்டி FRIENDS FILM FACTORY TEAM சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசு கொடுத்தார்கள். 


இதை பெற்று கொண்ட இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், “என் அம்மா இப்போது எங்களுடன் இல்லை, ஆனால் இந்த நினைவு பரிசு மூலமாக என் அம்மா என் குடும்பத்தார்களுடன் இன்னும்  வாழ்ந்துகொண்டு இருப்பது போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்து  பெருமிதம்கொண்டார், மேலும் நினைவு பரிசு கொடுத்த 6 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment