Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Tuesday, 23 January 2024

இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு

 *இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில்  திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த அற்புத சந்தர்ப்பத்தில், PVCU யுனிவர்ஸிலிருந்து மற்றொரு காவிய, சாகசத்திரைப்படமான, “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!*





ராமர் கோவில் திறப்பு நன்நாளில், PVCU யுனிவர்ஸிலிருந்து, அடுத்த அதிரடியாக “ஜெய் ஹனுமான்” பட முன் தயாரிப்பு பணிகள் துவக்கம் !!


பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை  தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின்  முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ஏற்கனவே முழுமையாக தயார் செய்துவிட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன்,  முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும். 


இயக்குநர் பிரசாந்த் வர்மா இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனைத் தொடங்க, அற்புதமான  சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய நாளில், பிரசாந்த் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கப்பட்டது. முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்க, இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில், படக்குழு உற்சாகமாக உள்ளனர். 


இந்நிகழ்விலிருந்து ஒன்றிரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் ஒன்று, பிரசாந்த் வர்மா தெய்வத்தின் முன் நின்று ஸ்கிரிப்டை வைத்திருப்பதைக் காட்டினால், மற்றொன்று அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமான்’ படத்தின் கடைசி காட்சியைக் காட்டுகிறது.


இப்பிரம்மாண்ட படைப்பினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும்.

No comments:

Post a Comment