Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 17 January 2024

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான

 *பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!*











பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். 


இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 


நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் விபி மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, "பொங்கல் பண்டிகை நாளில் மேலும் உற்சாகமூட்டுவதற்காக தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்கள் அதன் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 


கடந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆன 'லியோ', 'துணிவு', 'மாமன்னன்' போன்ற படங்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  நெட்ஃபிலிக்ஸின் 50% வளர்ச்சி தென்னிந்திய கண்டென்களில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த வருடம் இந்தப் புதிய படங்களின் வரவு எங்கள் நெட்ஃபிலிக்ஸ் உறுப்பினர்களை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும்" என்றார்.


*நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்:*


*லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்),


 *ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்),


*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கன்னிவெடி' (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), 


*பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'மஹாராஜா' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 


*பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி, தி ரூட் தயாரிப்பில் 'ரிவால்வர் ரீட்டா' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்), 


*சோனி ஃபிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்  தயாரித்திருக்கும் 'சிவகார்த்திகேயன் 21' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 


*எஸ்என்எஸ் புரொடக்சன்ஸ் எல்எல்பி தயாரித்திருக்கும் 'சொர்க்கவாசல்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 


*ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியாகும் 'தங்கலான்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 


*லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'இந்தியன்2' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி)


*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*

நெட்ஃபிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்று. 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தும் உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், படங்கள் மற்றும் கேம்களை பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தருகிறது. உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், இடைநிறுத்தலாம் மற்றும் பார்க்கத் தொடங்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

No comments:

Post a Comment