Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Thursday, 18 January 2024

குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட

 *குடும்பங்கள் கொண்டாடும் டைரக்டர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்!*





*எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !!*


விஜய் நடித்த  “துள்ளாத மனமும் துள்ளும்” மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். 

இப்படத்தை தொடர்ந்து, 

அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த

 “பெண்ணின் மனதை தொட்டு”,  

ஜெயம்ரவி, பாவனா நடித்த “தீபாவளி”, 

விமல் நடித்த “தேசிங்குராஜா”,

விக்ரம் பிரபு நடித்த “வெள்ளகாரதுரை”,

விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, 

உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”,

கவுதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த சத்தம்” 

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தார். இத்தனை நடிகளின் ஹிட் லிஸ்டில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 

இவர் இப்பொழுது,

விமல் நடிக்க “தேசிங்குராஜா2” படத்தை இயக்கி வருகிறார். 


வருகிற 29ம் தேதி இவர், முதன் முதலாக இயக்கிய “துள்ளாத மனமும் துள்ளும்” வெளியாகி 25 வருடங்களாகிறது. 

இதை, #எழில்25 விழாவாகவும், #தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் விழாவாகவும் நடத்த இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்  P.ரவிசந்திரன் திட்ட மிட்டுள்ளார். 

வருகிற 27ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வடபழனி ‘கிரீன் பார்க்’ ஹோட்டலில்  விழா நடை பெறுகிறது. 


எழில் படங்களின் தயாரிப்பாளர்கள், பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் விழாவில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார்கள். 

முதல் முதலாக டைரக்‌ஷன் வாய்ப்பு கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி இந்நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார். 


இத்துடன், 

தேசிங்குராஜா2 நாயகன் விமல்,

முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் விழாவில் பங்கேற்கிறார்கள். 


இசை: வித்யாசாகர் 

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார் 

ஒளிப்பதிவு: செல்வா.ஆர்

எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்

ஆர்ட்: சிவசங்கர்

வசனம்-முருகன்

ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )

நடனம் : தினேஷ்

பாடல்கள்: யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்

பி.ஆர்.ஓ: ஜான்சன்


படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment