Featured post

Heartiley Battery Webseries Movie Review

Heartiley Battery Webseries Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம heartiley battery webseries  review அ பாக்க போறோம். இந்த series zee 5 ல ...

Friday, 19 January 2024

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  மட்கா படத்தின் அதிரடியான ஓப்பனிங் பிராக்கெட் அறிமுக வீடியோ வெளியானது!!*



மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், பலாசா 1978, ஸ்ரீ தேவி சோடா சென்டர் படப்புகழ் கருணா குமார் இயக்கத்தில்,  பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது “மட்கா”, டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின் SRT என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு, பரபரப்பாக நடந்து வருகிறது. மட்கா திரைப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன்,

பிரம்மாண்டமாக உருவாகிறது.


வருண் தேஜுவின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் “மட்கா” திரைப்படத்தின் அறிமுகத்தை,  ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், படத்திலிருந்து ஓப்பனிங் பிராக்கெட் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். கிராமபோனில் கதாநாயகன் இசையை வாசிப்பதை காட்டும் காட்சியுடன் இந்த வீடியோ துவங்குகிறது. பின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழும்  கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது. இதில் நவீன் சந்திரா கேங்ஸ்டராகவும், பி ரவிசங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகனின் சிறுவயதுப் பகுதி அவன் கபடி விளையாடுவதைக் காட்டுகிறது, பின்னர் அவன் சூதாட்ட மாஃபியாவின் தலைவனாகிறான். அவன் ஒரு சிகார் புகைத்துக்கொண்டு, யாரிடமோ போனில் ‘ப்ராமிஸ்’ என்று சொல்வதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.


இந்த வீடியோ கிளிப்பில், வருண் தேஜ் முழுமையாகக் காட்டப்படவில்லை என்றாலும், மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் முழுமையான தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது. அவரது ஆடை வடிவமைப்பு, 80களின் ஃபேஷன் பாணியை ஒத்திருக்கிறது. வருண் தன் கவர்ச்சிகரமான நடிப்பு மற்றும் மேனரிசம் மூலம் திரையில் அசத்துகிறார். அவர் பேசும் ‘பிராமிஸ்’ என்ற ஒரே வார்த்தை, மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


1958 மற்றும் 1982 க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆஷிஷ் தேஜா புலாலா ஆகியோரின் திறமையில் கடந்த காலத்தின் அழகியல் திரையில்  கொண்டுவரப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை அற்புதம். தொழில் நுட்ப தரமானது, வெகு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த அறிமுக வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. 


மட்கா  படக்கதை முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார்.


வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  


கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R எடிட்டராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இத்திரைப்படத்தில் பல அதிரடி காட்சிகள் இருப்பதால், 4 ஃபைட் மாஸ்டர்கள்  இணைந்து பணியாற்றுகின்றனர். 


மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.


நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்


தொழில்நுட்பக் குழு: 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார் 

தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா

பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ்

இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : பிரியசேத் 

எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R 

தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா 

கலை: சுரேஷ் 

நிர்வாகத் தயாரிப்பாளர் - RK.ஜனா 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் & டிஜிட்டல் - ஹேஷ்டேக் மீடியா


https://youtu.be/kuKZImGHWnw

No comments:

Post a Comment