Featured post

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

 *“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்* Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற...

Wednesday, 27 March 2024

எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி” ; விஷால்

 *”எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி” ; விஷால்* 


ஹீரோவாக என்னுடைய பயணம்25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன், 


அந்தவகையில் தற்போது  நான் முதன்முதலாக இயக்கும் படத்திற்காக  லண்டன், அசர்பைஜான் மற்றும் மால்டாஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம். #துப்பறிவாளன்2 & #டிடெக்டிவ்2. 


விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை திரு. ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது. எதுவந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும். 

 இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன். 


ஒரு நடிகர் என்கிற இந்த அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. #துப்பறிவாளன்2 வுக்கும் ஒரு இயக்குநராகவும் உங்களது ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.. எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலைப்டாதீர்கள்.. நிஜ வாழவிலோ அல்லது சினிமா வாழக்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் ஒருபோதும் கைவிடமாட்டேன். அதேபோல் உங்கள் குழந்தையான துப்பறிவாளன்2 வை தத்தடுத்த நான், அதை  உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் சார். கடவுளின் ஆசீர்வாதம்.. இப்போது வேலைக்கு கிளம்புகிறேன்.

நன்றி!

No comments:

Post a Comment