Featured post

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

 தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா  6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்...

Monday, 18 March 2024

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"!


வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள்ளது.


நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழவையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக படத்தின் இயக்குனர் வி.வில்லிதிருக்கண்ன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளார்.


ஒருவர் கஷ்டத்தில் சரியான நேரத்தில்  யார் உதவுகிறாரோ அவரே ஆண்டவனாகப் பார்க்கப்படுகிறார் என்பதே படத்தின் கதை.  இதில் கே.பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூடியூப்பர் மகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, எம்.கே.ஆர், முத்துச்செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். 


மகி பாலன் கேமராவை கையாள, கபிலேஷ்வர், சார்லஸ்தனா  இருவரும் இசை அமைத்துள்ளனர். எடிட்டிங் லெட்சுமணன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஆண்டவன் படத்தை முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்!


விரைவில் திரையில் தெரிவார் 'ஆண்டவன்'!


@GovindarajPro

No comments:

Post a Comment