Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Thursday, 23 May 2024

நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு

 “நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்கிறார்: பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர் 



பாகுபலி மற்றும் மஹிஸ்மதி உலகத்தில் இதுவரை கேட்காத, பார்க்காத மற்றும் அனுபவித்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் இருக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா இணைந்து இந்தியாவில் எண்ணற்ற இரசிகர்களின் அபிமானம் பெற்று திரைப்பட பிரான்சைஸ்-ன் ஒன்றில் அனிமேட்டட் சீரிஸை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட் (இரத்தத்தின் மணிமகுடம்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதையில் மஹிஸ்மதி நாட்டையும் மற்றும்  அரியணையையும் அதன் மிகப்பெரிய எதிரியான ரக்ததேவா என்ற பெயர் கொண்ட பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பதற்கு பாகுபலியும், பல்லாலதேவாவும் கைகோர்க்கின்றனர்.


மிகச்சிறப்பான நடிப்புத்திறனுக்கும் மற்றும் பல பிரபலமான திரைப்படங்கள் சீரிஸ்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதற்காகவும் நாடெங்கிலும் பரவலாக அறியப்படுபவராக நடிகர் சரத் கெல்கர் திகழ்கிறது. பாகுபலி சீரிஸின் பிரபல கதாநாயகனான பிரபாஸ்-க்கு பின்னணி குரல் கொடுத்ததற்காக இந்த திறமையான நடிகர் பாராட்டையும், புகழையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் டிஷ்னி+ ஹாட்ஸ்டாரில் பாகுபலி, கிரௌன் ஆஃப் பிளட் என்ற சீரிஸ் – ல் தனது பின்னணி குரலை இவர் வழங்கியிருக்கிறார்.  ஒரு பிரபல பின்னணி குரல் வழங்கும் நிபுணராகவும் மற்றும் திரையில் தோன்றும் நட்சத்திரமாகவும் இரு சிறப்பான பணிகளுக்கிடையே மாறி மாறி தான் பணியாற்றுவது பற்றி இவர் பேசுகிறார்.  


இது தொடர்பாக ஷரத் கல்கர் பேசுகையில், “டப்பிங் பணியை நான் சிறப்பாக செய்கிறேன்.  ஆனால், ஒரு நல்ல குரல் தேவைப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதனை நான் செய்வேன் என்று அர்த்தமில்லை.  முதலில் நான் ஒரு நடிகர்.  நான் சிறப்பாக நடிக்கக்கூடியவன்.  எனது குரலைப் பொறுத்தவரை எந்தவொரு பரிமாணத்திற்கும் அதனை என்னால் எடுத்துச்செல்ல முடியும்.  ஆனால், அதிஷ்டவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நபர்கள் என்னிடம் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.  ஒரே மாதிரியான முத்திரை என் மீது குத்தப்படாமல் இருப்பதற்காக, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும், பின்னணி குரல் கொடுக்கவும் நான் முயற்சி செய்கிறேன்.  நல்ல நேரங்கள் வருவதற்காக நான் காத்திருக்கிறேன்.  சிறப்பானது நிச்சயமாக வரும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார். 


பாகுபலி பற்றி அவர் மேலும் பேசுகையில், “பாகுபலியின் குரலாக என்னை ஆக்கியதற்கான அனைத்துப் புகழும், பெருமையும் எஸ்எஸ் ராஜமௌலி சாருக்கே உரித்தானது.  அதற்காக என்னை அவர் தேர்வு செய்தார் மற்றும் அந்த கதாபாத்திரத்தை நான் கற்பனை செய்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் அதற்குப் பின்னணி குரல் கொடுக்கும் முழு சுதந்திரத்தையும் எனக்கு அவர் தந்தார்.  பாகுபலி முதல் பகுதியின்போது மாலை வேளைகளில் அவர் வழக்கமாக வருகை தந்து செய்து முடிக்கப்பட்டிருக்கின்ற டப்பிங்கை சரிபார்ப்பார்.  பாகுபலி இரண்டாவது பகுதி டப்பிங் பணி நடைபெறும்போது அவர் வரவேயில்லை.  எங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து “உங்களது பணியை நீங்கள் செய்யுங்கள்” என்று சொல்லி விடுவார்,” என்று தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார். 


    ~ பாகுபலி: கிரௌன் ஆஃப் பிளட் இப்போது டிஷ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீம் ஆகிறது~

No comments:

Post a Comment