Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Sunday, 12 May 2024

சிவம் பஜே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ்

 *'சிவம் பஜே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டது!*



கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படம் புரொடக்‌ஷன் 1. இந்தப் படம் 'சிவம் பஜே' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.


இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, ​​அஸ்வின் பாபு கவனம் ஈர்க்கும் விதத்தில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


இந்த போஸ்டரில், அஸ்வின் கோபத்தோடு காணப்படுகிறார். அவர் ஒற்றைக் காலில் நின்று கோபத்துடன் ஒரு கையால் ஒரு குண்டர்களைத் தூக்குவதை இதில் பார்க்கலாம். அகோரிகள், திரிசூலங்கள், இருட்டில் காகங்கள் மற்றும் கடவுள் சிலை பின்னணியில் இருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம், படம் தீவிர ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.


திகங்கனா நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ஹைப்பர் ஆதி, சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி கூறுகையில், "அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய கதையை எங்களின் கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சிவம் பஜே தயாரிக்கப்பட்டிருக்கிறார். அப்சர் இயக்கத்தில் உருவாகி வரும் புதுயுகப் படம் இது. இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை விட இந்த ஃபர்ஸ்ட் லுக் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர்களான அர்பாஸ் கான், சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாதாஷாபே பால்கே ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2024ல் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வென்ற தசரதி ஷிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படத்தை டெக்னிக்கல் ரீதியாக எந்த வித சமரசமும் செய்யாமல் புதுமையான முறையில் உருவாக்கி வருகிறோம். ஜூன் மாதம் படம் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிப்போம்".


இதுகுறித்து இயக்குநர் அப்சர் கூறுகையில், 'சிவம் பஜே' என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி ஆகியோரின் அமோக ஆதரவால் நான் எதிர்பார்த்ததை விட சிறந்த அவுட்புட் கிடைத்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் தருவோம்" என்றார். 


*நடிகர்கள்:*


அஸ்வின் பாபு, அர்பாஸ் கான், திகங்கனா சூர்யவன்ஷி, ஹைப்பர் ஆதி, முரளி ஷர்மா, சாய் தீனா, பிரம்மாஜி, துளசி, தேவி பிரசாத், ஐயப்ப சர்மா, ஷகலகா சங்கர், காஷி விஸ்வநாத், இனயா சுல்தானா மற்றும் பலர்.


*தொழில்நுட்ப குழுவினர்*:


எடிட்டர்: சோட்டா கே பிரசாத்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாஹி சுரேஷ், இசையமைப்பாளர்: விகாஸ் பாடிசா,

ஃபைட் மாஸ்டர்கள்: பிருத்வி, ராமகிருஷ்ணா, ஒளிப்பதிவு இயக்குநர்: தசரதி சிவேந்திரா,

மக்கள் தொடர்பு: நாயுடு சுரேந்திர குமார் - பானி கந்துகுரி (Beyond Media), மார்க்கெட்டிங்: டாக் ஸ்கூப்,

தயாரிப்பாளர்: மகேஸ்வர ரெட்டி மூலி,

இயக்குநர்: அப்சர்.

No comments:

Post a Comment