Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Monday, 27 May 2024

KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( 'KD: The Devil's Warfield' )

 “KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் (  'KD: The Devil's Warfield' )  திரைப்படம்,  டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!





இப்படத்தின்  ஆடியோ உரிமை ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது


KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்"  திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு,  ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான  திரை அனுபவமாக இருக்கும்.


"கேடி - தி டெவில்" 1970களில்  இருந்த  பெங்களூர் நகரின்  தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலந்த கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இப்படம்  இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.


KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்"  படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment