குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியை, 'வருங்கால கதாநாயகி' என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!
அப்பா மீடியா சார்பில், லக்ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள "எங்க அப்பா" இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்!
விழாவில் பேபி லக்ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!
அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் நினைவுப் பரிசு வழங்கி, பாராட்டினார்கள்!
@GovindarajPro







No comments:
Post a Comment