Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Saturday, 14 September 2024

சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம்

 *சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு*



சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டிருக்கிறது.  இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.‌ மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது.‌ இந்த அறிவிப்பு உண்மையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.


சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்.. முற்றிலும் உற்சாகமூட்டும் வகையில் வெளியீடு  குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான முறையில் வெளியிட தயாராக உள்ளது.  பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படத்தைப் பற்றிய தகவல்களில் ஆச்சரியமான விசயம் இதுதான். இதனால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இந்த அறிவிப்பின் மூலம் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கான எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது . மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் திறமையான முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் ஆகியோரின் நடிப்பில், உருவாகும் 'லவ் அண்ட் வார்' திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment