Featured post

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special  குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்! பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்க...

Friday, 11 October 2024

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

 பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு 






லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த   "முன்தினம்" தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில்  வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிட உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர். அதுமட்டுமின்றி செந்தில் அவர்கள் இந்த படத்தில் ஒரு மதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்


*PRO Mani Madhan*

No comments:

Post a Comment