Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 14 October 2024

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி !!*

 *பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!*





*போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !!* 


*கலக்கும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள், பரபரக்கும் பிக்பாஸ் சீசன் 8 !!*


தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸொடு முதலே  ரசிகர்களை ஈர்த்து வருகிறது.   


இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர்  விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்  வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது. 


வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட  அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. 


வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளைக் கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. 


வார முடிவில் எலிமினேசன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களைப் பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். 


ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன்,  எதிர்பாரா திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும்  கண்டுகளியுங்கள்.

No comments:

Post a Comment