Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Tuesday, 22 October 2024

சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன

 சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடல் ; 

கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பாடி வெளியிட்டார்! 









7 மைல்ஸ் பெர் செகண்ட் (7 Miles per second)  நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’ (Miss You). N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.


‘சித்தா’ படத்தின் மிப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரொமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 


அந்த வகையில் சென்னை குன்றத்தூரில் உள்ள ‘சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்லூரியில் (CIT) நேற்று இதன் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் சித்தார்த், இயக்குநர் N.ராஜசேகர், பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.  


இந்த நிகழ்வின்போது அங்கு குழுமியிருந்த மாணவர்களிடம் உரையாடிய சித்தார்த், அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் ‘மிஸ் யூ’ படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும் சில மாணவர்களுடன் மிஸ் யூ படத்தின் பாடலுக்கு இணைந்து நடனமும் ஆடினார்.


இந்த படத்தில்  “நீ என்ன பாத்தியே” என்கிற ஒரு பாடலையும் பாடியுள்ளார் சித்தார்த். இந்த பாடலை மேடையில் சித்தார்த் பாடி, மாணவர்கள் மத்தியில் பாடலை  வெளியிட்டார்.


Johnson Pro

No comments:

Post a Comment