Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Wednesday, 23 October 2024

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா

 *ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!*



ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.

மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  


சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.



சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். 


ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில்,  அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார்.  


சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment