Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 14 October 2024

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான

 கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம்  நடிகரான இயக்குனர் நவீன்.






நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.


இயக்குனர் சீனுராமசாமி  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான

கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.


இந்த படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவரது நடிப்பை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என வாழ்த்தியது மறக்க முடியாது என கூறினார்.


தொடர்ந்து இயக்குனர் எழில்  இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் மற்றும் வேல் குமரேசன் அவர்கள் இயக்கும் வசூல் மன்னன், ரிஷிராஜ் அவர்கள் இயக்கும் காட்டான் போன்ற திரைப்படங்களில்

நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நவீன்.

No comments:

Post a Comment