Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Thursday, 21 November 2024

டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்

 *டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'*



*ஹைபர் லூப் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' டிசம்பரில் ரிலீஸ்* 


ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras).


பிரசாத் முருகன் இயக்கும் இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். 


முக்கிய வேடங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நெடுநல்வாடை  படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார்.  படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.


ஹைபர் லிங்க் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. 


இயக்குநர் பிரசாத் முருகன் படம் பற்றி கூறும்போது, “மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்து கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன். காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.


அப்படி  நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக  ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்” என்று கூறியுள்ளார்..  


இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. 


வரும் டிசம்பரில் இந்தப்படத்தை திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.   

 


*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*


இயக்கம் ; பிரசாத் முருகன்


வசனம்-பாடல்கள் ; ஜெகன் கவிராஜ்  


இசை ; ஜோஸ் ப்ராங்க்ளின் 


ஒளிப்பதிவு ; காளிதாஸ் மற்றும் கண்ணன்


படத்தொகுப்பு ; 'ராட்சசன்' புகழ் சான் லோகேஷ் 


கலை இயக்குநர் ; நட்ராஜ் 


சண்டைக்காட்சிகள் ; சுகன் 


ஆடை வடிவமைப்பு ; ரிஸ்வானா


லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர் 


எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: KSK செல்வகுமார்


தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்


மக்கள் தொடர்பு ;; KSK செல்வா, மணி மதன்..

No comments:

Post a Comment