Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Friday, 15 November 2024

தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை

 *தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது*

*'கார்த்திகை பௌர்ணமி' தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.*


புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குபேரா'வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, 'கார்த்திகை பௌர்ணமி' பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் சிறந்த காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான விருந்தாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 'ஜிம் சர்ப்' மற்றும் 'தலிப் தஹில்' ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் 'தனுஷ்' நீண்ட தலைமுடி மற்றும் தாடி கொண்ட பிச்சைக்காரன் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார். இருப்பினும், இன்றைய க்ளிம்ப்ஸ் வீடியோவில் வெளியான ஒரு புதிய தோற்றம் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அதில் அவர் குறைவான தலைமுடி மற்றும் முழுவதும் முகச் சவரம் செய்த முகத்துடன், ஒரு பணக்காரரைப் போல தோற்றமளிக்கிறார். இது உற்சாகத்தை அதிகப்படுத்தி, குபேராவின் கதைக்களத்தைப் பற்றிய ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் 'கிங்' நாகர்ஜுனா ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'குபேரா' திரைப்படம், ‘இசை ஜாம்பவான்’ தேவி ஸ்ரீ பிரசாத்தின் சிறப்பான இசை, நிகேத் பொம்மியின் பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில் தோட்டா தரணியின் கலைநயம் ஆகியவற்றை காட்சிப் படுத்தவுள்ளது. இப்படத்தை ஆர். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் திறம்பட படத்தொகுப்பு செய்து, ஒரு வசீகரிக்கும் கதை ஓட்டத்தை உறுதி செய்துள்ளார். 'குபேரா'வின் உலகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டிற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.



தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள 'குபேரா', இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ திரைப்படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் வளமான காட்சிகளுக்கு உறுதி அளிப்பதுடன், இது ஒரு தரமான சினிமா அனுபவத்திற்கு களம் அமைக்கிறது.


*நடிகர்கள்:-*


தனுஷ்

நாகார்ஜுனா 

ராஷ்மிகா மந்தனா 

ஜிம் சர்ப்

தலிப் தஹில்


*படக்குழு:-*


எழுத்து மற்றும் இயக்கம்: சேகர் கம்முலா

தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் 

தயாரிப்பாளர்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத் 

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி 

படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் ஆர்.

தயாரிப்பு வடிவமைப்பு: தோட்டா தரணி

ஆடை வடிவமைப்பு: கல்யாண் ஸ்ரீராம் மற்றும் பூர்வா ஜெயின் 

விளம்பர வடிவமைப்பு: கபிலன்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் (V4U Media)

No comments:

Post a Comment