Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Saturday, 23 November 2024

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள்

 யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது






’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நாயகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு!


முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார்.


இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.


நல்ல கதைக்களம் கொண்ட மிகப்பெரிய காமெடி திருவிழாவாக மட்டும் இன்றி, மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்ககூடிய திரைப்படமாக உருவாகும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.


படம் குறித்து தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில், “நாங்கள் பல வருடங்களாக திரைத்துறையில் பைனான்ஸ் செய்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியிருக்கிறது. யோகி பாபு சாரை கதையின் நாயகனாக வைத்து நாங்கள் தயாரிக்கும் முதல் படமான ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ குடும்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம், அதன் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்றார்.


படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சிம்ரன் பேசுகையில், “மத்தகம் இணையத் தொடர் மற்றும் சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். யோகி பாபு சாருடன் கதாநாயகியாக நடிப்பது மகிழ்ச்சி. இந்த படம் கலகலப்பான படமாக இருக்கும்.” என்றார்.


படத்தைப் பற்றிய மேலும் பல விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருப்பதோடு, படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.

No comments:

Post a Comment