Featured post

Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026

 Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026) In a significant milestone for Indian cinema...

Thursday, 8 January 2026

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு



குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர்.


நவீன சமூகச் சிந்தனைகளை மையமாகக் கொண்ட ஒரு Contemporary Social Drama ஆக உருவாகியுள்ள ‘யூஃபோரியா’, சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது.


மேலும், இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் ஆராய்ந்து பேசும் திரைப்படமாகவும் ‘யூஃபோரியா’ அமைந்துள்ளது.


இந்த திரைப்படத்தில் பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘துரந்தர்’ மெகா பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சாரா அர்ஜுன் நடித்துள்ள அடுத்த முக்கியமான திரைப்படமாக ‘யூஃபோரியா’ உருவாகியுள்ளது.


‘ஒக்கடு’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த குணசேகர் – பூமிகா சாவ்லா கூட்டணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘யூஃபோரியா’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறது. பூமிகாவுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த கதாபாத்திரம் இப்படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.


‘ஒக்கடு’ படத்தை இயக்கியதும், விஜய்யின் மெகா பிளாக் பஸ்டர் ‘கில்லி’ படத்திற்கு கதை எழுதியவரிடமிருந்து உருவாகும் ஒரு புதிய, அர்த்தமுள்ள சினிமா அனுபவம் தான் ‘யூஃபோரியா’.


இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்; பிரவீன் கே. போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


மேலும், முன்னதாக மெகா பிளாக் பஸ்டர் ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் குணசேகர் – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கூட்டணி, இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



நடிகர்கள் :

பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர், ரோஹித்,விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்வி ராஜ்,கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு :

கதை, திரைக்கதை, இயக்கம் : குணசேகர்

வழங்குபவர் : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி

தயாரிப்பாளர்கள் : நீலிமா குணா – யுக்தா குணா

இசை : கால பைரவா

ஒளிப்பதிவு : பிரவீன் கே. போத்தன்

எடிட்டர் : பிரவீன் புடி

வசனங்கள் : நாகேந்திர காசி – கிருஷ்ண ஹரி

மக்கள் தொடர்பு : விஜய முரளி,  கிளாமர் சத்யா, சதீஷ் குமார் (S2 மீடியா),

மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் (தமிழ்) : N. S. ஜெகதீசன் (Digitally)

No comments:

Post a Comment