Featured post

Bigg Boss Vikraman’s Debut Movie with Golden Gate Studios Wraps Up Filming

 *Bigg Boss Vikraman’s Debut Movie with Golden Gate Studios Wraps Up Filming* Golden Gate Studios Producer Thilakavathy Karikapan's  upc...

Friday, 2 January 2026

லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்

 ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார்  இயக்குநர் வெற்றிமாறன்






பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. 

படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.


இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியாரியவாதி சுபா. வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. 


தொழில்நுட்பக் குழு:

கதை & இயக்கம் : தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு : எம்.வி. பனீர்செல்வம் தொகுப்பு : வி. பூபதி 

இசை & பின்னணி இசை : தர்புகா சிவா 

கலை இயக்கம் : அன்பு 

மேக்கப் : குப்புசாமி 

உடை வடிவமைப்பு : ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம் : மாரியப்பன், குட்டிகிருஷ்ணன் 

மக்கள் தொடர்பு : ரேகா


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’, படம் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.


முதல் பார்வையை வெளியிட்டு, படக்குழுவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ படக்குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகள்.

No comments:

Post a Comment