Featured post

Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026

 Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026) In a significant milestone for Indian cinema...

Thursday, 8 January 2026

டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!' 'டாக்ஸிக்' (Toxic)பிறந்தநாள் வெளியீட்டில் ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை

 *'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!' 'டாக்ஸிக்' (Toxic)பிறந்தநாள் வெளியீட்டில் ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை*



யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான 'டாக்ஸிக்' பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ' என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.


' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!' யாஷ்ஷின் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில்  தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது


'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.


யாஷ் 'டாக்ஸிக்' திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா - ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் 'டாக்ஸிக்' திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.


அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.


ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்... அசைக்க முடியாத உறுதியுடனும்... முழுமையான கட்டுப்பாடுடனும்... ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun)  அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.


அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல... அவர் நோக்கம் - தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.


அதன் முதல் காட்சியிலிருந்து' டாக்ஸிக்' ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.


இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது... 'டாக்ஸிக்' ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல... அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.


பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்... சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான... அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.


'டாக்ஸிக்' அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.


நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்... இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம்  பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும்,  நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.


கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.


தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) -  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.


கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ்  ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் 'டாக்ஸிக்' படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.

இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Link : 

https://www.youtube.com/watch?v=aF08WVSvCok

No comments:

Post a Comment