Featured post

மாறாக அது நம் வாழ்வின் ஒரு அங்கம். அதுவே கதாநாயகனின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது

 *“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”... ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாக...

Friday, 31 July 2026

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!



















டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!


K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.


இந்நிகழ்வினில்


பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது


அனைவருக்கும் வணக்கம். "நிறம்" திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும், "நூதனா" பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது ஒரு அருமையான அனுபவம். இமான் சார் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பதிவு நடத்துவார். இயக்குநர் பலராம் கிருஷ்ணா மிகவும் அன்பாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் எங்களை கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நடன அமைப்பாளர் சாய் பாரதி பேசியதாவது


அனைவருக்கும் வணக்கம். "நிறம்" திரைப்படத்தில் "நூதனா" பாடலுக்கு நடன அமைக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பலராம் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மற்றும் இமான் சாருக்கு என் நன்றிகள். முகன் மற்றும் ப்ரீத்தி இருவரும் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்கள். குறிப்பாக கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உருவாக்கியதால், பாடல் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்.


நடிகை தான்யா ஹோப் பேசியதாவது


எல்லோருக்கும் வணக்கம். "நிறம்" திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த அழகான வாய்ப்பை அளித்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கும், என்னை இந்த படத்தில் இணைத்த நிதின் சத்யாவுக்கும் என் மனமார்ந்த நன்றி. சங்கர் மாஸ்டரின் நடன அமைப்பு இந்த பாடலை இன்னும் அழகாக்கியுள்ளது. முழு படக்குழுவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.


பாடகி பிரவஸ்தி பேசியதாவது


எல்லோருக்கும் வணக்கம். நான் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரவஸ்தி. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படப் பாடல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை அளித்த இசையமைப்பாளர் டி. இமான் சார் மற்றும் இயக்குநர் பலராம் கிருஷ்ணா சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சிறு வயதில் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியிருந்தாலும், ஒரு தமிழ் திரைப்படத்தில் பாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். "நிறம்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


நடிகை ப்ரீந்து மாதவி பேசியதாவது


அனைவருக்கும் வணக்கம். இன்று முழு "நிறம்" படக்குழுவுடன் இந்த மேடையில் இருப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்துள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்கள் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அனைவரும் திரையரங்கில் சென்று "நிறம்" திரைப்படத்தை பார்த்து ரசித்து, உங்கள் ஆதரவை வழங்குங்கள். நன்றி.


நடிகர் நிதின் சத்யா பேசியதாவது


எல்லோருக்கும் வணக்கம். "நிறம்" திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இமான் சார் இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் இசையமைத்துள்ளார். இயக்குநரின் அர்ப்பணிப்பும், தயாரிப்பாளரின் நம்பிக்கையும் இந்த படத்தின் பலம். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த நல்ல படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக நண்பர்களின் கையில்தான் இருக்கிறது. அனைவரும் படம் பார்த்து மனதார ஆதரித்து, நேர்மையான கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இசையமைப்பாளர் டி. இமான் பேசியதாவது


"நிறம்" திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தின் கதையை கேட்டவுடனேயே இதில் ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் விவேகா, பா. விஜய், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து, இந்த படக்குழுவின் உழைப்பை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியதாவது


எல்லோருக்கும் வணக்கம். இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்னை நம்பிய குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. "நிறம்" என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.


நாயகன் முகன் பேசியதாவது


அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. "நிறம்" ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர். இந்த படத்தில் நடிக்க என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு நிறைவேறியது. நிதின் சத்யாவுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என அனைவரும் இந்த படத்திற்காக மனதார உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.


‘நிறம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Trailer - 

https://www.youtube.com/watch?v=WXLsIwv66FM

Signal at 11.30' Promises a Gripping Blend of Romance and Thrills

 *’Signal at 11.30' Promises a Gripping Blend of Romance and Thrills*






_*Following the encouraging response to its intriguing title and first-look poster, 'Signal at 11.30' is steadily building curiosity among film enthusiasts. Bankrolled by Alar Studios, the film stars Santhosh Prathap in the lead and promises an engaging cinematic experience that seamlessly blends romance, suspense and unexpected twists.*_


Certain stories instantly spark curiosity with a single question. Signal at 11.30 is one such film. While the title itself has become a talking point, the makers continue to keep its significance under wraps, choosing to preserve the mystery until audiences experience it on the big screen.


Speaking about the film, writer-director Malarvizhi Natesan says, "The title is deeply connected to the soul of the story, and revealing its significance now would take away one of the film's biggest surprises. All I can say is that every minute in this story matters, and every character has a purpose. 'Signal at 11.30' is essentially a romantic thriller filled with unexpected twists and emotional moments that keep the narrative moving in an engaging way.”


Sharing her experience of casting the lead actors, she adds, "While writing the script, I had a very clear picture of the emotional depth and screen presence the lead characters required. Santhosh Prathap was one of the very few actors I felt could effortlessly balance both. His sincerity and commitment have elevated the character beautifully. Bhavya Trikha and Poojitha Ponnada have also delivered performances with remarkable conviction, and I am grateful to every artist and technician who became part of this journey. We have made this film with complete honesty, and I sincerely hope audiences enjoy every twist, every emotion and every surprise that 'Signal at 11.30' has to offer.”


With an intriguing premise, an emotionally driven narrative and a screenplay packed with suspenseful turns, 'Signal at 11.30' aims to deliver a refreshing theatrical experience for audiences who enjoy stories that keep them guessing until the very end.


Produced by Malarvizhi Natesan and Dr. Shivani Subramani under the Alar Studios banner, the film stars Santhosh Prathap, Bhavya Trikha, Poojitha Ponnada, Jayaprakash, Munishkanth and others in pivotal roles. The film features music by D. Imman, cinematography by Raja Bhattacharjee, editing by R. Kalaivanan, and choreography by Sherif.

காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'!*

 *காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'!*






'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம் குறித்தான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் படமாக இது அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


சில கதைகள் ஒரு கேள்வியிலேயே ஆர்வத்தைத் தூண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் 'சிக்னல் அட் 11.30'. படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், படத்தலைப்பின் அர்த்தத்தை இதுவரை வெளிப்படுத்தாமல், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்திற்காக படக்குழு அதனை சஸ்பென்ஸோடு வைத்திருக்கிறது.  


இப்படம் குறித்து எழுத்தாளர் - இயக்குநர் மலர்விழி நடேசன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்த தலைப்பு கதையின் கருவோடு நேரடியாக இணைந்துள்ளது. அதன் அர்த்தத்தை இப்போது வெளிப்படுத்தினால், படத்தின் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று முன்கூட்டியே தெரிந்துவிடும். இந்தக் கதையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கிறது. 'சிக்னல் அட் 11.30' என்பது காதல், சஸ்பென்ஸ், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ரொமான்டிக் த்ரில்லர். கதை முழுவதும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நகரும்" என்றார்.


முன்னணி கதாபாத்திரங்களின் தேர்வு குறித்து அவர் மேலும் பேசுகையில், "திரைக்கதை எழுதும்போதே கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆழமும், திரை ஆளுமையும் குறித்து எனக்கு தெளிவான பார்வை இருந்தது. அந்த இரண்டையும் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களில் சந்தோஷ் பிரதாப்பும் ஒருவர். அவரது அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும் அந்தக் கதாபாத்திரத்தை மேலும் செழுமையாக்கியது. பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடாவும் அர்ப்பணிப்புடன் திறமையாக நடித்துள்ளனர். இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்பக் கலைஞருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். 'சிக்னல் அட் 11.30' வழங்கும் ஒவ்வொரு திருப்பத்தையும், உணர்வுகளையும், ஆச்சரியத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.


ஆர்வத்தைத் தூண்டும் கதைக்களம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களுடன், 'சிக்னல் அட் 11.30' ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். நடன அமைப்பை ஷெரீஃப் கவனித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’

 *சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’  க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !* 




ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.


மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


CHENNAI, India—July 31, 2026  — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.



இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ யின் விறுவிறுப்பான டிரெய்லரை இன்று வெளியிட்டது.


ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. இதில் எம். சசிகுமார் SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.


இந்த டிரெய்லர், ஒரு பதற்றம் நிறைந்த புதிய விசாரணைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. வழக்கின் உண்மையை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும், அதைவிட இருண்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியில், பாரம்பரியமும் புலனாய்வும்,  ஜல்லிக்கட்டு திருவிழாவின் தீவிரமான சூழலில் கதை நகர்கிறது.


தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவது, நேர்மையும் விடாமுயற்சியும் கொண்ட காவல் அதிகாரியான SI மூசா ரஸாவை, ‘மணி’ என்ற மர்மமான கைதியை பற்றித் தேடும் விசாரணைக்குக் கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் சாதாரண கொலை வழக்காகத் தோன்றும் இந்த விசாரணை, பின்னர் பொதுமக்களின் பார்வை, ஊடக பரபரப்பு, அரசியல் மற்றும் மனித பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதும் சிக்கலான பயணமாக மாறுகிறது. மூசா உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் போது, புதைக்கப்பட்டிருந்த பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த பரபரப்பான கதை, உண்மை என்பது முதலில் தோன்றுவது போல எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.


இந்தத் சீரிஸின், எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில்..


 “‘வதந்தி’ சீரிஸின் மையக் கருத்து எப்போதும் நாம் எதை நம்புகிறோம், எத்தகைய சங்கடமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருந்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த ரசிகர்களின் அன்பும் விமர்சகர்களின் பாராட்டும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதுவே இந்த அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வழிவகுத்தது. இரண்டாவது சீசனில், ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதைத் தாண்டி, அதிகாரம், மௌனம் மற்றும் ஆழமாக வேரூன்றிய அமைப்புகள் நீதியைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்க விரும்பினேன். மதுரையை கதைக்களமாகத் தேர்வு செய்தது, கலாச்சார வளமும் உணர்ச்சிப் பூர்வமான சூழலையும் கதைக்கு வழங்கியது. சசிகுமார் மற்றும் திறமையான நடிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நேர்மையையும் ஆழத்தையும் கொண்டு வந்துள்ளனர். புஷ்கர், காயத்ரி மற்றும் பிரைம் வீடியோவுக்கு அவர்களது உறுதியான ஆதரவுக்கும் இந்தக் கதையில் வைத்த நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மர்மப் பயணத்தை ரசிப்பதோடு, தொடர் முடிந்த பிறகும் அது எழுப்பும் கேள்விகளை பார்வையாளர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.


SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம். சசிகுமார் கூறுகையில், “மூசா ரஸா கதாபாத்திரத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது அசைக்க முடியாத நேர்மையே. உண்மையின் அடிப்படையில் அமைந்த நீதியே உண்மையான நீதி என்று நம்பும் மனிதர் அவர். அதற்காக தனிப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உண்மையைத் தேடுவதை அவர் நிறுத்தமாட்டார். காவல்துறை சீருடையின் பின்னால் இருக்கும் மனிதனை—அவரது அமைதியான மன உறுதி, பலவீனங்கள் மற்றும் அவரது நம்பிக்கைகளை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை—ஆராய்வதே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் அவரை கடினமான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அதனால் இது ஒரு மர்மக் கதையாக மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் மாறியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ், புஷ்கர், காயத்ரி, பிரைம் வீடியோ மற்றும் இந்த அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. மூசா ரஸாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, அவருடன் சேர்ந்து இந்த மர்மத்தை அவிழ்த்து, இறுதி உண்மை வெளிப்பட்ட பிறகும் அந்தக் கதை அவர்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.


TRAILER LINK: 

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8

PrimeVideo Unveils the Gripping Trailer for Vadhandhi Season Two—The Mysteryof Mani, an Unmissable Crime Drama Starring M. Sasikumar in the Lead

 *PrimeVideo Unveils the Gripping Trailer for Vadhandhi Season Two—The Mysteryof Mani, an Unmissable Crime Drama Starring M. Sasikumar in the Lead*




Created,written, and directed by Andrew Louis and produced under the banner ofWallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, theeight-episode series is a riveting tale of guilt, secrets, rumors, andredemption Set againstthe culturally rich backdrop of Madurai, the second season in the franchisestars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, AnaghaMaruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar inpivotal roles


 Premieringexclusively on Prime Video on August 7, Vadhandhi Season Two—The Mystery of Mani will beavailable to stream in Tamil, along with dubs in Telugu and Hindi, andsubtitles in 15 languages, including English, across India and over 240countries and territories worldwide


  CHENNAI, India—July 31, 2026—PrimeVideo, India's most-loved entertainment destination, today unveiled thecaptivating trailer for Vadhandhi Season Two—The Mystery of Mani, thehighly anticipated next chapter of its critically acclaimed Tamil Originalseries. Created, written, and directed by Andrew Louis and produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, the eight-episode series stars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles. Vadhandhi Season Two—The Mystery ofMani will premiere exclusively on Prime Video in Tamil with dubs in Teluguand Hindi and subtitles in 15 languages, including English, across India andover 240 countries and territories worldwide on August 7.

  

The trailer draws audiences into atense new investigation, with every step towards solving the case uncovering aneven darker mystery. Set against the culturally rich backdrop of Madurai, wheretradition and investigation collide amid the raw energy of the iconicJallikattu festival, the story unfolds with the discovery of skeletal remainsat the site of a highway project that leads M. Sasikumar's SI Moosa Raza, anhonest and relentless police officer, to an elusive prisoner named Mani. Butwhat appears to be a murder investigation soon spirals into something far moreunsettling as Moosa sets off in pursuit of the truth, putting him on acollision course with public perception, media frenzy, politics, and humanfrailties. As he digs deeper, buried secrets begin to surface, setting thestage for a suspenseful tale of guilt, secrets, rumors, and redemption wherethe truth proves to be far more complicated than it first appears. 


Creator, writer, and director AndrewLouis said, "At its heart, Vadhandhi has always been about questioningwhat we choose to believe and the uncomfortable truths we often choose toignore. The positive audience response and critical acclaim for the firstseason were incredibly heartening and paved the way for the next chapter in thefranchise. With season two, I wanted to craft a mystery that goes beyonduncovering a crime to explore how power, silence, and deeply rooted systemsshape our perception of justice. Setting the story in Madurai gave us aculturally rich and emotionally charged world that became integral to thenarrative. Sasikumar, along with an exceptionally talented ensemble cast,brought remarkable honesty and depth to their performances, elevating everycharacter and the emotional weight of the story. I'm deeply grateful to Pushkarand Gayatri, and to Prime Video, for their unwavering support and belief inthis vision. I hope audiences are not only gripped by the mystery and enjoy thejourney but also continue to reflect on the questions the story raises longafter it ends." 


M. Sasikumar, who plays the role of SI Moosa Raza, said, "Whatdrew me to Moosa Raza was his unwavering sense of integrity. He's a man whobelieves that justice is meaningless unless it's built on the truth, even whenpursuing it comes at a personal cost. What fascinated me most was exploring theman beneath the badge—his quiet resilience, vulnerability, and the moraldilemmas that constantly test his convictions. Every step of his investigationforces him to confront difficult choices, making this as much an emotionaljourney as it is a gripping mystery. Working with Andrew Louis, Pushkar,Gayatri, Prime Video, and such a phenomenal cast and crew made the experienceincredibly rewarding. I hope audiences connect with Moosa Raza's journey,immerse themselves in unraveling the mystery alongside him, and stay with thestory long after the final revelation." 


TRAILER LINK: 

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்

 மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்




இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 


கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் இந்தியா CEO திரு ராசிக் அஹ்மது சமூக வலைதளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

நட்பின் சக்தியை கொண்டாடும் Friendship Day Special: JioHotstar-ல் பார்க்க வேண்டிய Must-Watch Titles

 *நட்பின் சக்தியை கொண்டாடும் Friendship Day Special: JioHotstar-ல் பார்க்க வேண்டிய Must-Watch Titles*








வாழ்க்கையின் எந்த சவாலையும் தாண்ட உதவுவது உண்மையான நண்பர்கள்தான். இந்த Friendship Day-யை முன்னிட்டு, நண்பர்கள், சகோதரத்துவம் மற்றும் மறக்க முடியாத பந்தங்களை கொண்டாடும் சிறப்பு JioHotstar வாட்ச் லிஸ்டை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.


*1. சஞ்சு (Sanju)*


சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த படம், உண்மையான நண்பன் யார் என்பதை நினைவூட்டுகிறது. எல்லா சிக்கல்களிலும் சஞ்சுவுக்கு துணையாக நிற்கும் கம்லியின் நட்பு, நட்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.


*2. ஹாரி பாட்டர் (Harry Potter)*


ஹாரி, ரான், ஹெர்மயோனி மூவரின் நட்பு, விசுவாசமும் ஒற்றுமையும் எந்த மந்திரத்தையும் விட வலிமையானது என்பதை உணர்த்துகிறது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் ரசிக்க ஏற்ற ஒரு காலத்தால் அழியாத கிளாசிக்.


*3. சிச்சோரே (Chhichhore)*


கல்லூரி வாழ்க்கையின் கலகலப்பையும், விடுதி நண்பர்களின் மறக்க முடியாத பந்தத்தையும் கொண்டாடும் படம். பழைய நண்பர்களுடன் பார்க்கும்போது நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த தேர்வு.


*4. செக்ஸ் அண்ட் தி சிட்டி (Sex and the City)*


வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தோழிகளின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் தொடர். நட்பே உண்மையான ‘சோல்மேட்’ என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லும் ரசிகர்கள் விரும்பும் கிளாசிக்.


*5. ஃபைண்டிங் டோரி (Finding Dory)*


நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அன்புக்குரியவர்களிடம் திரும்பிச் சேரும் பயணத்தை சொல்லும் மனதை வருடும் அனிமேஷன் திரைப்படம். குடும்பத்துடன் ரசிக்க ஏற்ற ஒரு Feel-Good படம்.


*6. ஃப்ரெண்ட்ஸ் (Friends)*


எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர். நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத நட்புகள் நிறைந்த Friends, Friendship Day கொண்டாட்டத்திற்கு சரியான தேர்வு.


இந்த Friendship Day-யில், உங்கள் நெருங்கிய நண்பர்களை அழைத்து, JioHotstar-ல் இந்த அற்புதமான நட்புக் கதைகளை ஒன்றாக ரசிக்குங்கள்! 💙

The Ultimate Friendship Day Binge Guide on JioHotstar

 *The Ultimate Friendship Day Binge Guide on JioHotstar*








You can survive any challenge that life throws at you as long as you have your core group backing you up. This Friendship Day, celebrate the people who keep you grounded, make you laugh until you cry, and know every single one of your red flags. We’ve curated the ultimate JioHotstar watchlist featuring cinema's greatest squads, duos, and chaotic roommates. Scroll down, pick your vibe, and call your besties it’s time for a proper binge-fest. 


*1. Sanju* 

Let’s be honest, we all need a friend who has our back even when things get completely chaotic and then there is Kamli.Sanju might be a biographical drama about the roller-coaster life of Bollywood actor Sanjay Dutt, but at its heart, it’s one of the greatest cinematic tributes to brotherhood. Through drug addiction, controversies, and rock-bottom moments, watching Kamli stand like a rock for Sanjay proves what a true jigri yaar looks like. 



*2. Harry Potter*

Through flying cars, giant spiders, and epic battles, Harry Potter proves that the greatest superpower in the wizarding world is loyalty. Rewatching the adventures of Harry, Ron, and Hermione is the ultimate nostalgic trip back to Hogwarts and a reminder that your own friends are the real magic in your life.



*3. Chhichhore*

From surviving impossible exams to giving hilarious nicknames to your wingmates, Chhichhore captures the unfiltered madness of hostel life like no other. It’s loud, it’s chaotic, and it celebrates those weirdos who become your absolute family away from home. Grab your college buddies, order some junk food, and get ready to relive the golden days of bunking classes, cheap canteen dates, and unbreakable bonds.



*4. Sex and the City*

"Maybe our girlfriends are our soulmates, and guys are just people to have fun with." Carrie Bradshaw said it best, and this show proves it in every single episode. Whether you're navigating messy careers or chaotic dating lives, having your girls by your side makes everything better. Perfect for a cozy weekend binge with your favorite constants, this classic series is a glittering reminder that romantic relationships come and go, but your besties are forever. 


*5. Finding Dory*

A delightful ocean-sized adventure about loyalty, acceptance, and finding your way back home with the people who matter most. Finding Dory is the ultimate feel-good watch to remind you that your true squad will always help you navigate the deepest waters. 


*6. Friends*

Let’s be real you can watch this show a hundred times, and it still feels like a warm hug. From Thanksgiving flashbacks and smelly cat songs to the ultimate apartment-betting episodes, Friends is the comfort food of television. It’s the show you put on when you want to laugh, unwind, and celebrate the people who know your deepest secrets

Thursday, 30 July 2026

Spiderman English Movie Review

Spiderman The Brand New Day Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம spiderman brand  new day படத்தோட review வை தான் பாக்க போறோம். Marvel universe ல நம்ம எத்தனையோ superheroes அ பாத்திருக்கோம். உதாரணத்துக்கு ஒன்னு அவங்க கடவுள் அ இருப்பாங்க, இல்ல பணக்காரனை இருப்பாங்க, ஆனா spiderman அந்த category க்கு வரமாட்டாரு. ஒரு சாதாரண college ல படிக்கற ஒரு student, நல்லது செய்யணும் ண்றதுக்காக எந்த எல்லைக்கும் போற ஒரு மனுஷன் மாதிரி தான் இது வரைக்கும் potray பண்ணிருக்காங்க. இது வரைக்கும் எல்லா spiderman movies க்கும் எப்பவுமே craze இருந்துட்டே இருக்கு.  இப்போ  tom holland ஓட spiderman character க்கு அதிகமாவே craze இருக்குனு தான் சொல்லணும். இப்போ recent அ release ஆனா odyssey படத்துல இவரோட நடிப்பு பாராட்டப்பட்டது. 



இப்போ அத தொடர்ந்து இந்த படம் release ஆயிருக்கு. spider man no way home ல எல்லா multiverse ல இருக்கற spiderman அ கொண்டு வந்திருந்தாங்க. அது எல்லாமே super அ இருந்தது. இந்த படம் தான் spiderman ல last படம் னு சொல்லிருக்காங்க. சோ ஒரு பக்கம் power இருந்தாலும் emotions அதுலயும் முக்கியமா peter parker ஓட loneliness தான் அதிகம இருக்கு. 


no way home க்கு அப்புறமா peter இப்போ தனியா வாழ்ந்துட்டு இருக்காரு. இப்போதைக்கு அநியாயத்தை எதிர்த்து நிக்குற ஒரு ஆளு, police க்கு பிடிச்ச ஒரு நபர் அதுமட்டும் இல்ல இவரோட control ல நகரம் safe அ இருக்கு. சோ எல்லாமே நல்ல தான் போயிடு இருக்கு. இப்போ தான் spider man க்கு ஒரு பிரச்சனை வருது. SHIELD ஓட  subunit ஆனா Department of Damage Control அ invisible ஆனா ஒரு மனுஷன் தாக்குறான். இந்த department அ Battle of New York க்கு அப்புறமா உருவாக்கி இருப்பாங்க. இப்போ யாரு இந்த ஆளு? எதுக்காக இந்த department அ தாக்குறான்?  இவனோட motive என்ன ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


Tom holland ஓட spiderman franchise அ பாக்கும்போது original story னு எதுவுமே கிடையாது. இவரை proper அ avengers civil war ல தான் introduce பண்ணிருப்பாங்க. so ironman க்கு ஒரு assistant மாதிரி நிப்பாரு. memory erasing spell க்கு அப்புறமா தான் இவரோட story கொஞ்சம் original அ வர ஆரம்பிச்சது. சோ இந்த படத்துல MCU ல இருக்கற நெறய படங்கள் ல இருக்கற iconic moments அ இதுல recreate பண்ணிருக்காங்க. அது எல்லாமே நல்ல இருந்தது. உதாரணத்துக்கு captain america long sleep க்கு அப்புறம் எந்திரிக்கறது, hulk ஓட thunderclap னு இன்னும் சொல்லிட்டே போகலாம்.    26 வருஷமா MCU ஓட படங்கள் வந்துட்டு இருக்கு. இதோட tribute  ஆவும் MCU  ஓட fans க்கு entertaining ஆவும் இந்த படம் அமைச்சிருக்கு. 


இந்த படத்துல நெறய characters அ add பண்ணிருக்காங்க. அவங்க எல்லாரும் equal ஆனா weightage யும் குடுத்திருக்கிறது நல்ல தான் இருக்கு. hulk , punisher னு இவங்களோட character detailing நல்ல இருந்தது. destin daniel cretton தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. என்னதான் emotions  கொஞ்சம் அதிகம இருந்தாலும், அங்க அங்க comedy scenes யும் வச்சிருக்காரு. அதுஎல்லாமே நல்ல இருந்தது. அது மட்டும் இல்ல strict  அ இருக்கற punisher அ கூட pookie யா மாத்தி வச்சிருக்காரு. இந்த படத்தோட visual effects அப்புறம் CGI எல்லாமே superb அ இருந்தது. 


tomholland ஓட character என்ன மாதிரியான situation ல இருக்கு ன்றது அவரோட expressions அ வச்சே புரிஞ்சுக்கலாம். zendaya MJ role ல நடிச்சிருக்காங்க. எப்பவும் போல ஒரு பக்கம் comedy இன்னொரு பக்கம் emotional னு அட்டகாசமா நடிச்சிருக்காங்க .jon bernthal தான் daredevil படத்துல punisher அ நடிச்சிருந்தாரு, இந்த  படத்துலயும் அதே character அ தான் பண்ணிருக்காரு. அப்புறம் Frank and peter , இவங்களுக்கு நடுவுல இருக்கிற bonding super அ இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல திரைப்படம் தான் இது. சோ  miss பண்ணாம இந்த படத்தை போய் theatre ல பாருங்க.

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

 *நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!*





நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை உலகளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்சன்ஸ் விநியோகம் செய்கிறது.


*30 ஜூலை 2026:*

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரெய்லர், இன்று (ஜூலை 30, 2026) அதிகாலை இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.


*நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ பற்றி:*


தயாரிப்பாளரும், இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’, உலகின் மிகப் பழமையான மற்றும் காலத்தால் அழியாத மகாகாவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும், இரண்டு பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான திரைப்படம். 


படைப்பின் கடவுளான பிரம்மா, காத்தருளும் கடவுளான விஷ்ணு, அழிவின் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் மூவுலகையும் ஆட்சி செய்து வருகின்றனர். தேவலோகம், பூலோகம் உள்ளிட்ட உலகங்கள் குழப்பத்தை எட்டும் வேளையில், தர்மத்தை நிலைநிறுத்த விஷ்ணு, மனித அவதாரமாக பூமியில் பிறக்கிறார். இந்த முறை அவர் இராமராக (ரன்பீர் கபூர்) அவதரிக்கிறார்.


அவருக்கு எதிராக நிற்பவர், மும்மூர்த்திகளின் வரங்களைப் பெற்ற, அளவற்ற ஞானமும் அசைக்க முடியாத வலிமையும் கொண்ட, அழிக்க முடியாத அசுர மன்னன் இராவணன் (யஷ்). அகங்காரமும் பழிவாங்கும் உணர்வும் நிரம்பிய அவரது சக்தி, பிரபஞ்சத்தையே சிதைக்கக் கூடியது. 


இராவணனை எதிர்கொள்ள விதிக்கப்பட்டவன் என்பதையும், தனது உண்மையான தெய்வீக நோக்கத்தையும் அறியாத இராமர், தர்மத்தின் உருவாகவும் அயோத்தி மக்களால் மிகவும் நேசிக்கப்படும் இளவரசராகவும் வாழ்கிறார். தனது அன்பு மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் விசுவாசமான தம்பி லட்சுமணன் (ரவி துபே) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக  விதிவசத்தால் அவரது வாழ்வு வனவாசத்திற்குத் தள்ளுகிறது. அதுவே இறுதியில் உலகின் விதியை நிர்ணயிக்கும் இருவரின் மோதலுக்குக் காரணமாகிறது.


நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார்.  இந்திய உணர்வுகளையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் அவரது கதை சொல்லும் பாணி, 'தங்கல்' போன்ற திரைப்படங்கள் மூலம் சீனா உள்ளிட்ட உலக சந்தைகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது. 


இந்தப் படத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியத் திரையுலகின் சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்அருண் கோவில், தனது மறக்க முடியாத ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார்.


மேலும், ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.


முதன்மை கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் பகவான் ஸ்ரீ ராமராக நடித்துள்ளார். தலைமுறைகள் கடந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படும் தர்மத்தின் உருவமாக அவர் திரையில் தோன்றுகிறார்.


சீதா தேவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கருணை, தைரியம் மற்றும் உயர்ந்த பண்புகளின் அடையாளமாக மதிக்கப்படும் சீதையின் கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார்.


ராக்கிங் ஸ்டார் யஷ், தனது மான்ஸ்டர் மைம்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பாளராகவும் இந்தப் படத்திற்கு உள்ளார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மறக்க முடியாத எதிரி கதாபாத்திரங்களில் ஒருவரான இராவணனாக நடித்துள்ளார்.


இந்தப் படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் எழுதியுள்ளார். மேலும், இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட உலகின் மிகப்பெரிய கூட்டணியாக, ஆஸ்கர் விருது பெற்ற இசை மேதைகள் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.


இந்தப் படைப்பின் மூலம், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள், உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, மனிதகுலத்தின் மிகப் பழமையான மகாகாவியங்களில் ஒன்றை இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் நோக்கமாகும்.


தயாரிப்பாளரும் ‘ராமாயணம்’ படத்தின் படைப்பாற்றல் வடிவமைப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் என்பது நமது மிகச் சிறந்த இதிகாசங்களில் ஒன்று மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். நமது பண்பாடு, விழாக்கள், வாழ்க்கை மதிப்புகள் ஆகியவற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயிரோட்டமிக்க காவியமாகவும் இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி திருவிழாக்கள் இருளை ஒளி வெல்வதும், அதர்மத்தை தர்மம் வெல்வதும் என்ற ராமாயணத்தின் நிலையான செய்தியை நமக்கு நினைவூட்டுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வையும் சிந்தனையையும் தொடர்ந்து வழிநடத்தும் கதைகள் உலகில் மிகவும் அரிது. ராமாயணம் அத்தகைய மகத்தான காவியம்.


உலக திரைப்படத் துறையில் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்ட அனுபவத்தில், இந்தியாவின் மகத்தான கதைகள் உலகின் மிகப்பெரிய திரைகளில் சொல்லப்பட வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் எனக்கெப்போதும் இருந்தது. இன்று, அந்தக் கனவை நனவாக்குவதற்குத் தேவையான கலைஞர்கள், தொழில்நுட்பம், கைவினைத் திறன் மற்றும் ஒருங்கிணைந்த படைப்பாற்றல் நம்மிடம் உள்ளது.


இந்தியாவின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தை அதன் உண்மைத்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும், உலகத் தரமான சினிமா தரத்துடனும் உலக மக்களிடம் கொண்டு செல்லும் தருணம் இது.


இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பண்பாட்டு செழுமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இந்தியாவில் இந்தக் கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இப்போது அதை உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொள்வது எங்களின் பெருமையும் பொறுப்பும் ஆகும்" என்றார்.


இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல. அது எடுத்துரைக்கும் காலத்தை வென்ற மனித மதிப்புகள்தான்.


ஒரு திரைப்பட இயக்குநராக, இந்தக் கதையை உலகளாவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், அது ஏற்கனவே உலகளாவிய கதையாகவே உள்ளது. என் பொறுப்பு, அதை முழுமையான நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் மிகுந்த மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதே!


திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் எடுக்கப்பட்ட அனைத்தும் ஒரே எண்ணத்தால் வழிநடத்தப்பட்டன! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம். அதே சமயம், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் தொழில்நுட்பங்களுடன் அதை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் இலக்காகக் கொண்டோம்.


உலகின் தலைசிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதை சொல்லிகளுடன் இணைந்து இந்தக் கனவை நனவாக்கியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன்.


ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் வெறும் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்ல, ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை உயிருடன் வைத்திருக்கும் அதன் ஆன்மாவையும் திரையில் கண்டு மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


*DNEG பற்றி:*


DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் 'சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்' பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது. 


தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.



*பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:*


திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த 'தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. 


தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட 'ராமாயணம்' கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான 'டிரான்ஸ்மீடியா' உலகத்தையும் உருவாக்கவுள்ளது.


*மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:*


நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.

THIS IS WHERE THE EPIC BEGINS: NAMIT MALHOTRA'S RAMAYANA TRAILER DROPS GLOBALLY IN FIVE INDIAN LANGUAGES

 THIS IS WHERE THE EPIC BEGINS:

NAMIT MALHOTRA'S RAMAYANA TRAILER DROPS GLOBALLY IN FIVE INDIAN LANGUAGES





Directed by Nitesh Tiwari and produced by Namit Malhotra's Prime Focus Studios and eight-time Academy Award®️-winning VFX studio DNEG, in association with Yash's Monster Mind Creations, Ramayana: Part One will release worldwide on Diwali 2026, with global distribution by Sony Pictures and North India distribution by Dharma Productions.


30 July 2026 - The makers of NAMIT MALHOTRA'S RAMAYANA: PART 1 have unveiled the film’s highly anticipated official trailer, captivating fans and audiences worldwide. The trailer was released in the early hours of July 30, 2026, across five Indian languages, including Hindi, Kannada, Telugu, Tamil, and Malayalam.


ABOUT NAMIT MALHOTRA’s RAMAYANA


From visionary producer and film-maker Namit Malhotra comes RAMAYANA: PART 1, a sweeping, two-part cinematic event inspired by one of the world’s most enduring epics.


Since the beginning of time, the Trinity Gods rule the three worlds: Brahma - god who creates; Vishnu - god who protects; and Shiva - god who transforms. As the realms of heaven, earth edge toward chaos, the Trinity god Vishnu descends to earth in an avatar to restore balance.  This time, Vishnu is reborn as RAMA (Ranbir Kapoor), a human prince destined to restore balance. Opposing him, stands the most formidable, learned, undefeatable and immortal demon king RAVANA (Yash), blessed by the Trinity themselves, driven by pride and a vengeance powerful enough to shatter the cosmos.


Unaware of his true purpose as the only opponent destined to stand up to Ravana in a fateful cosmic design, Rama is the idol of Dharma (duty above all) and the most loved crown prince of Ayodhya, the greatest human dynasty of the time. Rama tries to build a life of quiet honour with his beloved wife Sita (Sai Pallavi) and loyal brother Lakshman (Ravie Dubey) amongst others, until a twist of fate drives him into exile and toward an inevitable clash with Ravana in a reckoning so cataclysmic it will decide the destiny of gods and mortals.


Namit Malhotra’s Ramayana has brought stalwarts like acclaimed filmmaker Nitesh Tiwari, whose storytelling has resonated with audiences across the world, creating box-office benchmarks in markets like China with Dangal, while remaining deeply rooted in Indian emotion and culture - alongside an extraordinary ensemble spanning generations of Indian cinema. Arun Govil, whose portrayal of Lord Rama remains etched in the hearts of generations of Indians, now returns to Namit Malhotra’s Ramayana as King Dasharath, father of Rama; the legendary Shobana as Kaikesi; Ajinkya Deo as Sage Vishwamitra; Kunal Kapoor as Lord Indra; Rakul Preet Singh as Surpanakha; and Ravie Dubey as Lakshmana.


Leading this extraordinary ensemble are Superstar Ranbir Kapoor, portraying Lord Rama - the most loved, worshipped and enduring moral compass for generations across India and beyond; Sai Pallavi as Maa Sita, bringing grace, strength and compassion to one of the most revered women in history; and pan-India superstar Rocking Star Yash,  who is also co-produces Ramayana through his Monster Mind Creations, portraying the mighty and indestructible Ravana - one of the greatest and most formidable antagonists ever known.


Adapted by award-winning screenwriter Shridhar Raghavan; Ramayana features the biggest East- West collaboration yet with music by Oscar®️-winning legends Hans Zimmer and A.R. Rahman


The coming together of this remarkable ensemble reflects producer Namit Malhotra's vision of uniting India's finest artistic talent with globally acclaimed filmmakers, artists, technicians and craftspeople, bringing together an extraordinary creative force to present one of humanity's oldest and most enduring stories with a scale, authenticity, and cinematic ambition never attempted before.


Namit Malhotra, Producer and Creative Architect of Ramayana, said:


"The Ramayana is not just one of our greatest epics; it is part of how we live, celebrate and pass on our values from one generation to the next. Every year, Dussehra and Diwali remind us that its message continues to guide millions through the triumph of light over darkness and righteousness over evil. Very few stories continue to shape everyday life thousands of years after they were first told. The Ramayana does.


Having spent much of my life working across the global film industry, I have always believed that India's greatest stories deserve to be experienced on the world's biggest stage. Today, we finally have the artists, the technology, the craftsmanship and the collective ambition to present this extraordinary cultural legacy to audiences everywhere with the authenticity, scale and cinematic excellence it deserves.


This is not simply the beginning of a film. It is the beginning of a journey to celebrate India's cultural richness with the world. India has always lived this story. It is now our privilege to share it with the world."


Nitesh Tiwari, Director of Namit Malhotra’s Ramayana, said:


"The Ramayana is one of the greatest stories ever told, not because of its scale, but because of the timeless values it represents. As a filmmaker, I never felt the responsibility to make it universal, it already is. My responsibility has been to approach it with complete honesty, authenticity and reverence.


Every creative decision we have made - from the writing and performances to the production design, music, visual effects and every frame on screen, has been guided by a single thought: to honour this extraordinary legacy with the dignity and respect it deserves while presenting it through the finest cinematic craftsmanship possible.


It has been the privilege of a lifetime to work alongside some of the world's finest artists, technicians and storytellers in bringing this vision to life. I hope audiences everywhere experience not just the spectacle of Ramayana, but also the emotion, humanity, and timeless spirit that have allowed it to endure for thousands of years."

About DNEG

DNEG is a world-leading visual effects and animation company for the creation of film, TV, and immersive content, with worldwide offices and studios across North America, Europe, Asia, and Australia. With almost 30 years of industry experience, DNEG has been honoured with eight Academy Awards®️ for ‘Visual Effects’ since 2011, and numerous BAFTA, Primetime EMMY®️, and Visual Effects Society Awards for its critically acclaimed work. Upcoming announced projects include Coyote vs. Acme (August 2026), Toxic: A Fairy Tale for Grown-Ups (August 2026), Klara and the Sun (October 2026), Street Fighter (October 2026), The Lord of the Rings: The Rings of Power - Season 3 (Nov 2026), The Cat In The Hat (Nov 2026), Ramayana: Part 1 (Nov 2026), Blade Runner 2099 (Nov 2026), Looney Tunes: Daffy Season (Nov 2026), The Angry Birds Movie 3 (Dec 2026), Above the Below (Dec 2026), Animal Friends (Jan 2027), Bad Fairies (May 2027), Margie Claus (Nov 2027), Alone at Dawn, SAS: Rogue Heroes S3, On The Line, Road House 2, Snoopy Unleashed, Blood On Snow, This City Is Ours S2, Black Palace, and Gundam.