Featured post

India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd

 *India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd* https://www.instagram.com/reel/...

Thursday, 30 April 2026

Kara Movie Review

Kara Movie Tamil Review 

Kara Movie Rating: 4/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் expect பண்ணிட்டு இருந்த kara படத்தோட review வை தான் இன்னிக்கு பாக்க போறோம். vignesh raja இயக்குதுல வெளி வந்த படத்துல Dhanush, Mamita Baiju, Jayaram, Suraj Venjaramoodu, K. S. Ravikumar, கருணாஸ் னு பலர் நடிச்சிருக்காங்க.இது danush உடைய 54 வது படம்.  por tholil படம் ஒரு blockbuster hit னு எல்லாருக்கும் தெரியும். இப்போ மறுபடியும் ஒரு thriller கதையை கொண்டு வந்திருக்காரு director  vignesh raja . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

dhanush ஒரு திருடன் அ இருக்காரு. அதுவும் சாதாரண திருடன் கிடையாது kara ஊர் ல இருக்கற பணக்கார வீடா பாத்து தான் திருடுவாரு. எப்பவுமே ஜாக்கிரதையா வேலைய முடிச்சிட்டு escape ஆகுறவரு, ஒரு நாள் திடுருனு police கைல மாட்டிக்குறாரு. இவரோட wife அ நடிச்சிருக்காங்க mamitha baiju . இவங்களுக்கு danush ஒரு திருடன் ன்றதே தெரியாது. ஆனா இந்த arrest மூலமா இவங்களுக்கு தெரிய வரவும் ரொம்ப மனுசுஒடஞ்சு போயிடுறாங்க. danush அ control க்கு எடுத்துட்டு வர try பண்ணுறாரு police officer suraj . ஆனா எப்படியோ danush இதுல இருந்து தப்பிச்சு ஓடி போய்டுறாரு. திருந்தி வாழனும் ன்ற முடிவுக்கு வர danush , தன்னோட மனைவியை கூட்டிட்டு அவரோட சொந்த கிராமத்துக்கு போறாரு. அப்போ தான் தனுஷ் க்கு ஒரு அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு. danush ஓட அப்பாவா இருக்கற k s ravikumar ஒரு பெரிய கடன் ல மூழ்கி போய் இருப்பாரு. இந்த கடன் ல இருந்து தன்னோட அப்பாவை காப்பாத்துறதும் , அவரோட தப்புக்கு பிராயச்சித்தம் தேடிக்குறதும் தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட கதை 1990 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அப்போ லாம் banking system அ பத்தி மக்களுக்கு எதுவுமே தெரியாது. இதை சாக்க வச்சு மக்களோட பணத்தை  எப்படி திருடுனாங்க ன்றது தான் இந்த படத்தோட கருவா இருக்கு. financial oppression அ பத்தி detailed அ எடுத்து சொல்லுற மாதிரி இந்த படம் அமைச்சிருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ thrilling  அ கதையை எடுத்துட்டு போயிருந்தாங்க. 


actors ஓட performance அ வச்சு பாக்கும்போது danush எப்பவும் போல ஒரு அசத்தலான acting அ வெளிப்படுத்தி இருக்காரு. இவரோட character க்கு ஏத்த அந்த emotional aspects எல்லாம் நல்ல perform பண்ணி இருந்தாரு. mamitha baiju வும் super அ நடிச்சு இருந்தாங்க. இவங்க village role எடுத்து பண்ணுறது இது தான் முதல் தடவை.  இருந்தாலும் இவங்க character க்கு இன்னும் detail குடுத்து இருந்த innum நல்ல இருந்திருக்கும். suraj தொடர்ந்து நெறய தமிழ் படங்கள் ல நடிச்சு audience ஓட மனச strong அ நிக்குறாரு னு தான் சொல்லணும். இவரோட நடிப்பும் இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. supporting actors அ நடிச்ச jayaram அப்புறம் karunas ஓட scenes எல்லாமே நல்ல இருந்தது.  


படத்தோட techincal aspects  அ பாக்கும்போது gv prakash ஓட music and bgm இந்த emotional கதைக்கு நல்ல set யிருந்தது. theni eshwar ஓட cinematography அப்புறம் sreejith sarang ஓட editing னு இது ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அப்புறம் mayapandi ஓட art direction அ பத்தி சொல்லி ஆகணும். 1990 s ல இருக்கற எல்லா விஷயமும் படத்துல கொண்டு வந்திருக்காரு. படம் பாக்கும்போது audience அந்த period க்கு போன மாதிரி ஒரு feeling அ குடுக்குது.    


actors ஓட strong ஆனா performance , மிரட்டலான திரைக்கதை, super ஆனா screenplay கொண்டது தான் kara . சோ miss பண்ணாம இந்த summer holidays க்கு உங்க family ஓட இந்த படத்தை theatre ல பாக்க மறந்துடாதீங்க.

After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release

 After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release*




KVN Productions and Monster Mind Creations today announced that the release of Toxic: A Fairy Tale for Grown-Ups has been rescheduled. The film, which was earlier set to release on June 4, 2026, will now arrive in theatres worldwide on a new date to be announced soon.


The decision follows the film’s presentation at CinemaCon, where it received a strong and encouraging response from global distributors and industry stakeholders. The reception opened up opportunities for a significantly wider international release, prompting the team to revisit and realign their release strategy.


With the film now complete, the makers are currently focused on locking global distribution and forging key international partnerships to ensure Toxic reaches audiences across markets at the scale it demands. The film is written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas.


Statement from Yash


“There are films we make, and then there are films that remind us why we fell in love with cinema. Toxic has been one such journey. Presenting our film at CinemaCon and witnessing the overwhelming global response reaffirmed what we have always believed—that this film deserves to reach its fullest potential worldwide.


Toxic is complete, and we are currently aligning global distribution and partnerships. In light of this, we have decided to recalibrate our release timeline. While we will not be releasing on June 4 as announced earlier, we will be releasing at a later, globally aligned date. Toxic will come to theatres across the world soon.


At a time when Indian cinema is finding its voice and stepping onto the global stage with such promise, each of us has a responsibility to raise the bar. As an actor and producer, I see this moment as an opportunity to do my part—for the Indian film industry and for all of us—by taking the time to ensure our film reaches the world with the impact it is meant to have.


Through every step and every change, your support has stayed with me, and I carry it with deep gratitude. Some stories ask for patience. Some journeys demand it. We promise to give you a film to enjoy and celebrate—a film that will stand as a proud moment for Indian cinema.”


Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria.


Shot in Kannada and English, the film will also release in dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam.


Produced by KVN Productions and Monster Mind Creations, the film will release in theatres worldwide on a new date to be announced soon

CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய

 *CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!*




*யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!*


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grownups )  திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.


படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ்  ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ்  இயக்கத்தில் உருவாகியுள்ளது.


இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:


“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.


டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.


இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”


இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா   சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.


*After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release*


KVN Productions and Monster Mind Creations today announced that the release of Toxic: A Fairy Tale for Grown-Ups has been rescheduled. The film, which was earlier set to release on June 4, 2026, will now arrive in theatres worldwide on a new date to be announced soon.


The decision follows the film’s presentation at CinemaCon, where it received a strong and encouraging response from global distributors and industry stakeholders. The reception opened up opportunities for a significantly wider international release, prompting the team to revisit and realign their release strategy.


With the film now complete, the makers are currently focused on locking global distribution and forging key international partnerships to ensure Toxic reaches audiences across markets at the scale it demands. The film is written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas.


Statement from Yash


“There are films we make, and then there are films that remind us why we fell in love with cinema. Toxic has been one such journey. Presenting our film at CinemaCon and witnessing the overwhelming global response reaffirmed what we have always believed—that this film deserves to reach its fullest potential worldwide.


Toxic is complete, and we are currently aligning global distribution and partnerships. In light of this, we have decided to recalibrate our release timeline. While we will not be releasing on June 4 as announced earlier, we will be releasing at a later, globally aligned date. Toxic will come to theatres across the world soon.


At a time when Indian cinema is finding its voice and stepping onto the global stage with such promise, each of us has a responsibility to raise the bar. As an actor and producer, I see this moment as an opportunity to do my part—for the Indian film industry and for all of us—by taking the time to ensure our film reaches the world with the impact it is meant to have.


Through every step and every change, your support has stayed with me, and I carry it with deep gratitude. Some stories ask for patience. Some journeys demand it. We promise to give you a film to enjoy and celebrate—a film that will stand as a proud moment for Indian cinema.”


Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria.


Shot in Kannada and English, the film will also release in dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam.


Produced by KVN Productions and Monster Mind Creations, the film will release in theatres worldwide on a new date to be announced soon.

Wednesday, 29 April 2026

லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 'லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!



“பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும், உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று நிறைவு பெற்றுள்ளது.


மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.


சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors G.  தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.


படத்தில் பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன்  தெலுங்கு you tube புகழ் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


இசையை FOXn என்ற இசையமைப்பாளர் ஜோடி (பிரதீப் PJ & Wayne Pavey) அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை P. G. முத்தையா கவனித்துள்ள நிலையில், தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. மகேந்திரன் கவனித்துள்ளார்.


தயாரிப்பாளர்களான தினேஷ் ராஜ் மற்றும் G. தனஞ்ஜெயன் ஆகியோர் படப்பிடிப்பு முழுவதிலும் நேரடியாக ஈடுபட்டு, இயக்குநரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப படம் சிறப்பாக உருவாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் (Post Production) வேகமாக நடைபெற்று வருகின்றன. Love Oh Love, 2026 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இளைஞர்களின் உறவுகளை நவீன கோணத்தில், உணர்ச்சிப் பூர்வமாகவும், மனதைத் தொடும் வகையிலும் சொல்லும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


PRO: ரேகா

Love Oh Love’ Shoot Wrapped; Post-Production in Full Swing*

 *‘Love Oh Love’ Shoot Wrapped; Post-Production in Full Swing*



The romantic entertainer “Love Oh Love”, starring Pavish Narayan, Naga Durga, Director Selvaraghavan, Director K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Adithya Kathir and many others, written and directed by Magesh Rajendran has successfully wrapped its entire shoot today after an intensive and vibrant filming schedule. The film has been shot majorly in Chennai capturing the city’s unique charm and urban flavour as a backdrop to this modern love story and few portions in Ooty.



The team recently celebrated a special milestone when the film’s first look posters were unveiled by Makkal Selvan Vijay Sethupathi. His gracious support and wishes have significantly boosted the film’s visibility and anticipation.



Produced by Zinema Media and Entertainment Ltd, Dinesh Raj, along with Creative Entertainers & Distributors’ G Dhananjheyan, the film is written and directed by Magesh Rajendran. “Love Oh Love” features Pavish Narayan (of Nilavukku Enmel Ennadi Kobam fame) alongside Naga Durga, a well-known Telugu YouTube sensation making her Tamil cinema debut.



Music for the film is composed by FOXn, an exciting composer duo from North Madras comprising Pradeep PJ and Wayne Pavey, who are set to deliver a fresh and emotionally engaging soundtrack. The film’s technical team includes cinematographer P.G. Muthaiah, National Award-winning editor N.B. Srikanth, and art director P. Mahendran.



Both the Producers Dinesh Raj and G Dhananjheyan were actively involved in the shoot and making throughout and are delighted the film has come out well and shot as planned by the Director with an ensemble cast and crew.



With the shoot now wrapped, post-production work is progressing at a brisk pace. “Love Oh Love” is slated for a Summer 2026 theatrical release.



Promising a youthful, heartfelt, and contemporary take on relationships, the film is poised to strike a chord with all audiences.



PRO: Rekha

Tuesday, 28 April 2026

கோலிவுட்டின் ' புதிய வரவு' க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் - ஒரு அதிரடிப் பயணம்!

 கோலிவுட்டின் ' புதிய வரவு' க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் - ஒரு அதிரடிப் பயணம்!







தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பிரேக்பாஸ்ட்' திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது.


ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் 'அச்சமின்றி' படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை 'படிப்பு தான் முக்கியம்' எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார்.


கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்:

சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார்.


இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து,  காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் செம ஸ்கோர் செய்திருக்கிறார்!


அடுத்து,  ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார்.


இது தவிர, மேலும் இரண்டு முக்கிய படங்களில் கமிட் ஆகி கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார்.


துடிப்பான நடிப்பு, எதார்த்தமான முகம் - தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான ஹீரோவாக வலம் வருவார்..

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

 *காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*



*Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.*


ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


 ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.


இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,


“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”


உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.


இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,


“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”


பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.


ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.


Kajal Aggarwal and Shreyas Talpade's The India Story set for July 24 release

 Kajal Aggarwal and Shreyas Talpade's The India Story set for July 24 release*



Presented by Zee Studios in association with MIG Production & Studios.


A gripping new socio-national drama, The India Story, starring  Kajal Aggarwal and Shreyas Talpade, is all set to hit theatres on July 24. Directed by Chettan DK and produced and written by Sagar B Shinde, the film promises to delve into a hard-hitting and relevant issue that resonates on a national scale.


At its core, The India Story, also referred to as The India Story: Slow Poison in progress, explores the alarming consequences of chemical misuse, particularly in the context of pesticide farming and related scandals. Moving beyond the lens of a single family’s ordeal, the narrative expands to reflect a much larger crisis affecting public health and safety. The film attempts to shed light on systemic lapses and the urgent need for stricter regulatory frameworks to prevent such widespread harm.


Speaking about the motivation behind the film, producer Sagar B Shinde shared, “We chose to tell this story because it reflects a reality that often goes unnoticed but impacts countless lives across the country. The misuse of chemicals, especially in pesticide farming, is not just an environmental concern, it’s a human crisis. Through this film, we hope to raise awareness and initiate meaningful conversations around accountability and change.”


With a storyline rooted in real-world concerns, the makers aim to strike a balance between compelling storytelling and social commentary. The film is expected to highlight the often-overlooked repercussions of industrial negligence while also questioning the accountability of powerful corporations.


Director Chettan DK praised the collective effort behind the film, saying, “Every member of the team, from the crew to the cast, has put in immense dedication to bring authenticity to this story. Kajal and Shreyas have delivered incredibly nuanced performances, and their commitment has truly elevated the film. We’ve worked hard to ensure that the narrative remains both engaging and impactful.”


Kajal Aggarwal, who has consistently explored diverse roles and Shreyas Talpade, known for his versatility, come together for the first time, bringing a fresh on-screen pairing. Their collaboration is anticipated to add emotional depth and intensity to a narrative that is both thought-provoking and unsettling.


As audiences increasingly gravitate towards content-driven cinema, The India Story positions itself as a timely and impactful release. With its strong message and engaging premise, the film is poised to spark conversations while delivering a gripping cinematic experience, backed by co-producers Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi, and further elevated by the work of DOP Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave. The film is all set to release in Tamil ,Hindi, and Telugu language.


A Zee Studios Worldwide Release

Monday, 27 April 2026

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15*






From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role


Exam will stream exclusively on Prime Video on May 15 in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English



MUMBAI, India—April 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced May 15 as the global premiere date for its upcoming Tamil Original series, Exam. From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, the seven-episode series written and directed by National Award-winner A. Sarkunam promises a tense, emotionally charged suspense drama set against the pressure-filled environment of a competitive exam. Featuring Dushara Vijayan and Aditi Balan in the lead, and Abbas playing a pivotal role, Exam will stream exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages including English.


“Exam is a very timely and relevant story that captures the emotional intensity of competitive exams and masterfully transforms it into a thrilling high-stakes drama. We believe it is a story that will resonate deeply with millions. It’s a privilege to once again collaborate with Pushkar and Gayatri after the success of Suzhal—The Vortex season 1 and 2, and Vadhandhi—The Fable of Velonie. We are excited to bring this story to our customers across the world on May 15,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video, India.


“With Exam, we wanted to dig into ambition, injustice, and those moral crossroads that people face when pushed to the edge,” shared creative producers Pushkar and Gayatri. “At the heart of this story is a young woman who refuses to remain powerless. Her journey is not about glamorizing defiance, but about exploring the emotional and ethical cost of standing up to a system stacked against her. Prime Video has been an incredible collaborator in taking our stories global before, and we believe it’s the perfect home to bring Exam to audiences worldwide.”

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’

 *பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான  ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின்  உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*






வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்


‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்


சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”


கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Saturday, 25 April 2026

தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS)

 *தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே.  ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவிப்பை பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா, MD தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.*



வணிகம் மற்றும் குடியுரிமை பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக, பி.எம். ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம், ஏப்ரல் 23 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு  முழுவதும் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கும்  வகையில், "GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT“ எனும் ஸ்லோகன் அதாவது  வாக்களியுங்கள் – விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள் – அந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்ற வலுவான செய்தியுடன் இந்த சலுகையை அறிவித்துள்ளது. 


இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக தங்களது சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூமுக்கு வருகிற எந்த வாடிக்கையாளருக்கும், உடனடியாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முயற்சி குறித்து  பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா கூறும்போது, 

வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும்,  தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். 


தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றும் மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வாக்களித்தபின்,  பெருமையுடன் அந்த விரல் மை குறியுடன் தங்கள் ஷோரூமுக்கு வரும்போது, வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இந்தியாவை உருவாக்கும் தங்கள் பங்களிப்பையும் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார். 


பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா, 

இந்த திட்டம்,  தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து வாக்களித்திருந்தாலும்,   சென்னையில் உள்ள தங்களுடைய  எந்த ஷோரூமையும் அணுகி, தங்கள் மை குறியைக் காட்டி ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.


சமூக பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அன்பு காரணமாகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்தாகவும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் தெரிவித்த அவர்,  மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பங்கேற்பை ஊக்குவிப்பதே தங்களுடைய  நோக்கம் என்றார். 


இந்நிகழ்ச்சியில்,  சென்னையில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, பிரத்யேக வடிவமைப்புடைய கைக்காப்பை அணிந்து, வாக்காளர்களை உற்சாகமாக வாக்களிக்க அழைத்தார்.  அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். இந்த விளம்பரத்தில்

"வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது  பெருமை!” என்ற தமிழ் வாசகம் இடம்பிடித்து இருந்தது. 


மகேஷ் பாபு தற்போது புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “வாரணாசி” என்ற மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.


60 ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கும் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறந்த நகை சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளுடன், தரம், நம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.


இந்த சலுகை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். வாங்கும் நேரத்தில் விரல் மை குறியைக் காட்ட வேண்டும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Friday, 24 April 2026

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு

 *ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*






*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*


*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*


இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.


“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.


மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.


“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.


இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*

 *GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*



Following a successful and well-received theatrical run, Happy Raj, starring G. V. Prakash Kumar, is all set to entertain audiences once again as it premieres today on Amazon Prime Video across India and on SimplySouth for audiences outside India.



The film, which emerged as a refreshing new-gen family entertainer in theatres, garnered appreciation for its vibrant storytelling, relatable emotions, and engaging performances. With its digital release, Happy Raj now reaches a wider global audience, bringing its blend of romance, humor, and heartfelt moments straight into homes.



Written and directed by debutant Maria Raja Elanchezian, and produced by Jaivarda of Beyond Pictures and co produced by Jaikanth Suresh who played a pivotal role in aligning and bringing this project together, ensuring its smooth journey from development to release.



The theatrical trailer, unveiled by Dhanush, had earlier ignited strong buzz and set the tone for the film’s success.



Happy Raj features an ensemble cast including Sri Gouri Priya, George Maryan, Abbas, Geetha Kailasam, Adhirchi Arun, and Madurai Muthu, among others, each contributing to the film’s lively and entertaining narrative.



Backed by a strong technical team, the film boasts music by Justin Prabhakaran, cinematography by Madhan Christopher, and editing by Selva RK, ensuring a visually appealing and emotionally engaging experience.



After winning hearts on the big screen, Happy Raj now promises to recreate the same magic on OTT, making it a perfect watch for families and friends to enjoy together from the comfort of their homes.

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!

 திரையரங்க வெற்றிக்குப் பிறகு  ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!



திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுகளைப் பெற்ற ஹேப்பி ராஜ் திரைப்படம், தற்போது தனது டிஜிட்டல் பயணத்தை தொடங்கியுள்ளது. G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ள இந்தப் படம், இன்று முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் வெளிநாடுகளில் SimplySouth மூலம் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது.



திரையரங்குகளில் புதிய  விதமான குடும்ப பொழுதுபோக்கு படமாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம், தனது உயர்ந்த கதை சொல்லல், நெருக்கமான உணர்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான நடிப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றது. இப்போது OTT வெளியீட்டின் மூலம், இது மேலும் அதிகமாக ரசிகர்களை சென்றடைகிறது.


இப்படத்தை இயக்குநராக அறிமுகமான மரியா ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ளார். ஜெயவர்தன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனம் மூலம் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக இருந்து இந்தப் படத்தின் ஆரம்ப புள்ளியிலிருந்து படம் வெளியாவது வரை அனைத்திற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


முன்னதாக, இந்தப் படத்தின் டிரெய்லரை தனுஷ் வெளியிட்டது படத்திற்கு பெரிய வரவேற்பை உருவாக்கி, அதன் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.


Happy Raj படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங்கை செல்வா RK மேற்கொண்டுள்ளார்.


திரையரங்குகளில் பல இதயங்களைக் கவர்ந்த Happy Raj, இப்போது OTT-யிலும் அதே மாயத்தை மீண்டும் உருவாக்கி, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக வீட்டிலிருந்தே ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!






பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.


இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது.


 நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையாளர்கள் இணைந்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.



தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக பணியாற்றி, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல். இது தலைமைத்துவம், அனுபவம் மற்றும் உறுதியை குறிக்கும் அடையாளமாக இந்தப் படத்தில் பிரதிபலிக்கிறது.


முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள மண்டாடி, தற்போது தனது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.


அடுத்த பெரிய அப்டேட்டிற்காக ‘மண்டாடி’ தயாராகிக் கொண்டிருக்கிறது – காத்திருக்கவும்!

RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*

 *RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*




Esteemed production house RS Infotainment, headed by Mr. Elred Kumar, is delighted to announce that the shoot of its ambitious sports action drama MANDAADI has been successfully wrapped following an extensive and demanding schedule.



Shot across challenging terrains and coastal backdrops, particularly in the Ramanathapuram belt, the team underwent a rigorous filming process to authentically capture the raw energy and spirit of the story. The intensive schedule featured large-scale action sequences, emotionally charged moments, and visually rich sailboat racing portions, all executed with precision and passion.



Directed by Mathimaran Pugazhendhi, MANDAADI promises a deeply rooted narrative set against a unique sporting backdrop. With the shoot now wrapped, the film has swiftly moved into post-production, where work is progressing in full swing.



Headlined by Soori, who continues to redefine his journey as a powerful performer in content-driven cinema, the film demanded intense physical preparation and dedication. His performance is expected to be one of the standout highlights of the film.



The film also stars Suhas, making his Tamil debut, alongside Mahima Nambiar as the female lead. The ensemble cast includes Sathyaraj, Ravindra Vijay, Mithun and Balasaravanan, all of whom bring depth and authenticity to this emotionally rich narrative.



The technical team is equally formidable, with music composed by G. V. Prakash Kumar, cinematography by S. R. Kathir ISC, production design by D.R.K. Kiran, editing by Pradeep E. Ragav, and action choreography by the renowned Peter Hein, Dhilip Subburayan and Mahesh Mathew. Their combined expertise ensures that MANDAADI is crafted with both technical finesse and emotional resonance.



Currently in post-production, the film’s editing, sound design, VFX, and music composition are progressing at a brisk pace, with the team working meticulously to shape a compelling cinematic experience.



MANDAADI explores a unique coastal world rooted in the lives of fishing communities. The term “Mandaadi” refers to a skilled expert who leads fishing expeditions with deep knowledge of ocean currents, wind direction, and wave patterns — symbolizing leadership, instinct, and resilience, which form the emotional core of the film.



Having already generated intrigue with its striking first look, the film now sails into its next phase, steadily building anticipation among audiences and industry circles alike.



Stay tuned as MANDAADI gears up for its next big reveal.

Breakfast Movie Review

Breakfast Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம breakfast  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது ar. Gandhi krishna .   இந்த படத்துல Raanav , Rosmin ,Sampath Raj , Kasturi , Archana ,Krithik Mohan ,Amitha Ranganthனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



Lakshmi யா நடிச்சிருக்க Amitha Ranganth அப்புறம் kritik mohan யும் husband and wife அ இருக்காங்க. இவங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வந்துகிட்டே இருக்கும், சுருக்கமா சொல்ல போன tom and jerry மாதிரி அடிச்சிக்கறாங்க. இனிமே கணவன் மனைவியா சேந்து வாழ முடியாது ன்ற முடிவுக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. அதுனால divorce க்கும் அப்ளை பண்ணிடுறாங்க. court ல இவங்க case நடக்கும்போது , judge இவங்க கிட்ட நிரந்தரமான முடிவை எடுக்கறதுக்கு முன்னாடி  counselling போகணும் னு தீர்ப்பை சொல்லிடுறாரு. 


அதுனால இவங்களும் psychologist அ போய் சந்திக்கறாங்க. அவங்க தான் kasturi.  இவங்க ரெண்டு பேர்கிட்டயும் advice பண்ணமா ஒரு கதையை சொல்லி இவங்க மனசை மாத்த முயற்சி பண்ணுறாங்க. இந்த கதை தான் இந்த படத்துல highlight னு சொல்லலாம். அந்த கதைல raanav நல்ல படிச்சவர இருப்பாரு ஆனா road cleaner அ வேலை செஞ்சுட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் பெரிய businessman அ இருக்காரு sampath raj,  இவரோட பொண்ணு தான் rosmin . raanav யும் rosmin யும் காதலிக்க ஆரம்பிக்குறாங்க. இது sampath க்கு சுத்தமா பிடிக்காது. parents ஓட எதிர்ப்பயும் மீறி கல்யாணம் பண்ணிக்ராங்க. 


ஆரம்புத்துல இவங்க ரெண்டு பேரோட life நல்ல தான் போய்ட்டு இருக்கும். ஆனா பிரச்சனை raanav ஓட குடும்பம் இவங்க கிட்ட வரும்போது தான் ஆரம்பிக்குது. இந்த குடும்பத்தால் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடுறாங்க. 


அதுக்கு அப்புறம் ஒரு intense ஆனா climax portion அ வைக்கிறாங்க. அது தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. குடும்பத்துல நடக்கற பிரச்சனைகள், psychological distress னு எல்லாமே ரொம்ப தெளிவா காமிச்சிருக்காங்க. 


g v prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு plus point அ அமைச்சிருக்கு. paneerselvam ஓட சினிமாட்டோக்ராபி அப்புறம் bhaskar and sujith ஓட் editing யும் பக்கவா இருக்கு. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களுக்கு குடுக்க பட்ட role ல நல்லவே நடிச்சிருக்காங்க. இருந்தாலும் sampath raj அப்புறம் kasturi ஓட நடிப்பு தான் அட்டகாசமா இருந்தது. 


gen z பசங்களுக்கு relate பண்ணிக்கிற மாதிரியான கதையை தான் கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

Battle Movie Review

Battle Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம battle  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது narayanan P.   இந்த படத்துல arjun,  aradhya krishna, devadharshini uma, munishkanth, uriyadi surali னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மணி அ நடிச்சிருக்க arjun prabhakaran north madras அ சேந்தவரு. இவரு lower middle class family  அ சேந்தவர இருந்தாலும் rap நல்ல பண்ணுவாரு. இவரு madhi யா நடிச்சிருக்க aradhya வை சந்திக்குறாரு. madhi ஒரு school ல teacher அ வேலை செஞ்சுட்டு இருப்பாங்க. ஆனா இந்த வேலை இவங்களுக்கு திருப்தி யா இருக்காது, அதுக்கு காரணம் இவங்க school principal தான். இவரு மதி க்கு கம்மியான சம்பளத்தை குடுத்து அதிகமா வேலைய வாங்குவாரு. இப்போ மணி யும் மதி யும் love பண்ணிட்டு இருப்பாங்க. இன்னொரு பக்கம் மதி கிட்ட படிக்கற ஒரு student அ காமிக்கறாங்க. அவங்கதான் மதுமிதா வா நடிச்சிருக்க devadharshini uma . இவங்க ஒரு விதமான depression ல இருப்பாங்க அதுக்கு காரணம் exam pressure தான். 


கொஞ்ச நாள் கழிச்சு மதுமிதா தற்கொலை பண்ணிட்டா ன்ற செய்தி வருது. இதுனால எல்லாரும் shock ஆயிடுறாங்க. இன்னொரு பக்கம் மதி ய principal late night ல தன்னொட office க்கு கூப்டு தப்பா நடக்க முயற்சி பண்ணுறாரு. அப்படியே மணி கிட்ட வந்தோம்னா uriyadi surali ன்ற ஒரு music director மணி ய வேலைக்கு எடுத்துக்கிறாரு. மணி rapper ன்றதுனால team எல்லாரும் இவர கலாய்க்குறாங்க. இதுனால மணியும் மனசுலவுல உடைஞ்சு போறாரு. இந்த மாதிரி இவங்க மூணு பேரும் அவங்க life ல நடக்கற இந்த battle அ எப்படி சமாளிக்க போறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


மணி ஒட flashback story touching அ குடுத்து இருந்தாங்க. படத்துல காமெடி scenes னு எதுவுமே கிடையாது. எல்லா scenes யும் ரொம்ப emotional ஆவும் , audience ஒரு scene அ கூட மறக்க கூடாது னு சோகமாவும் வச்ருக்காங்க. படத்தை பாக்கும் போது இதுல வர எல்லா character யும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 



இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது ஜீவா. இவரோட music அ இருக்கட்டும் இல்ல bgm அ இருக்கட்டும் எல்லாமே இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. cinematography அப்புறம் editing யும் நல்ல குடுத்திருக்காங்க. 


இந்த படத்துல நடிச்சிருக்க artist ஒட performance னு பாக்கும்போது arjun அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் ல அருமையா நடிச்சிருக்காரு. aradhtya ஓட் நடிப்பு genuine ஆவும் இயல்பாவும் இருந்தது. மத்த supporting actors எல்லாம் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு ஒரு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா-

 *சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்*



சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது.


பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, நட்சத்திரங்கள் தங்கள் பாதுகாப்பு அரண்களை தகர்த்து தங்கள் உண்மையான சுயத்துடன் வெளிப்படும் ஒரு தளர்வான மற்றும் சுதந்திரமான களத்தை உருவாக்குகிறது. தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நகைச்சுவை தருணங்கள் மூலம் ஜெகன் இந்த உரையாடலை வழிநடத்துவது மட்டுமல்லாமல்... அதை தூண்டி விட்டு, அந்த மேஜிக் நிகழ்வதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார். அவருடன் ஆபீஸ் கானா ( Office Ganna ) இசைக் குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஒரு துடிப்பான இசையை வழங்குகிறது.


தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லது துருவ் விக்ரம் ஆகியோரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறீர்களா..!? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். ஜாலி ஓ ஜிம்கானா அவர்களின் பொதுவான முகத்திரையை விலக்கி, அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. எந்த ஒரு திரைப்பட கதாபாத்திரமும் வெளிப்படுத்த முடியாத... உண்மையான கதைகள், எதிர்பாராத விசித்திர பழக்கங்கள் மற்றும் தன்னிச்சையான மகிழ்ச்சி தருணங்களை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திரைப்பட நட்சத்திரங்கள்- முன்னணி இசையமைப்பாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என பலரும் தங்கள் பாதுகாப்பு அரண்களை முழுமையாக கைவிட்டு, இயல்பாக கலந்து கொள்ளும் ஒரு ஈர்க்கக்கூடிய கலவையாக இந்நிகழ்ச்சி அமைகிறது. துருவ் விக்ரம்- ரவி மோகன்- தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் - மிர்ச்சி சிவா- பிரேம்ஜி - ஹரிஷ் கல்யாண்- மகத் ராகவேந்திரா- வைபவ் - அஸ்வின் கக்குமனு மற்றும் டிஜிட்டல் உலகின் ரசிகர்களுக்கு பிடித்த கோபி - சுதாகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.


நடிகர் ரவி மோகன் இது தொடர்பாக பேசுகையில், '' ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற ஒரு விளையாட்டில், என்னை விட என் ரசிகர்கள் என்னை எவ்வளவு ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து நான் வியந்து போனேன். அது எனக்கு பணிவையும், மிகுந்த நகைச்சுவையையும், ஒருவித கனவு போன்ற அனுபவத்தையும் அளித்தது '' என்றார்.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், '' ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சி என் ரசிகர்கள் இதுவரை கண்டிராத என் ஆளுமையின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. என் இயல்பான குணங்களை வெளிப்படுத்தி நான் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் நேரத்தை செலவிட்டேன்'' என்றார்


இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், '' நான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அல்ல. உண்மையாகவே நான் மகிழ்ச்சியாக இருந்த தேவி மட்டுமே'' என்றார் .


ஜாலி ஓ ஜிம்கானா ஒவ்வொரு தமிழ் பொது பொழுதுபோக்கு ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. திரையில் இந்த நட்சத்திரங்களுடன் வளர்ந்த ரசிகர்கள்.. இந்த நிகழ்ச்சியை இதமானதாகவும், தனிப்பட்டதாகவும் அவர்கள் சற்றும் எதிர்பாராத தருணங்கள் நிறைந்ததாகவும் காண்பார்கள். தமிழ் டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் இளம் பார்வையாளர்கள் புத்தம் புதிய இயல்பான மற்றும் தொடர்ச்சியாக பார்க்கத் தூண்டும் ஒன்றை இதன் மூலம் காண்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கும் என இந்த நிகழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது.


சன் நெக்ஸ்ட் பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானவை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் பார்வையிடலாம். மேலும் 'வடம்', 'டீசல்', 'சுமோ', 'ஃபோர்த் ஃப்ளோர் ', 'கிரானி', 'தீயவர் குலை நடுங்க' போன்ற படங்களையும், 'அயலான்', 'மங்காத்தா', 'தனி ஒருவன்' போன்ற ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களையும் நீங்கள் பார்க்கலாம்.


சன் நெக்ஸ்ட் பற்றி...


சன் நெக்ஸ்ட் ( SUN NXT) என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில்... நான்காயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில்... 44 மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது. திரைப்படங்கள்- தொலைக்காட்சி- நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகல் சலுகைகள் என பலதரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் உயர்தரமான தென்னிந்திய பொழுது போக்கில் இல்லமாக திகழ்கிறது.

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

 *ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*



*' கன்னக்குழியா ' வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !*


நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.


“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.


காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.


Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.


இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின்  காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


LINK : https://youtu.be/XXo-VzYUIjo

Thursday, 23 April 2026

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29”

 *கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!*



*White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!*


தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.


White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், கர்நாடகாவில் அஜித் நடித்த “துணிவு” மற்றும் தமிழகமெங்கும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.


“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.


இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.


மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்

 *பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில்,  கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*




*பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!*


*கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி!*


தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,  தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி  ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.


இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.


மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.


மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்

*Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*






*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை.*


*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு*


இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்.


இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது.


‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் Dhee அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, Dhee-யை உலக இசை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.


அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.


மேலும், ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் Dhee தனது கலை ஆழத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன.


இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படுவதுடன், உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் Dhee, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்.


தற்போது, தனது சமீபத்திய சுயாதீன பாடலான ‘VARI VARI’ வெளியீட்டிற்காக அவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் தேதியன்று கொழும்புவில் இந்த இசை ஆல்ப வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த வெளியீடு அவரது தொடர்ந்து வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைகிறது. மேலும், அவரது கதை தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் ஒரு சிறப்பு தருணமாகவும் இது விளங்குகிறது.