Featured post

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th

 Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th Censored with U/A Certificate | Winner of Multiple Prestigious Intern...

Thursday, 7 May 2020

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு"

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு"

"ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது" என்று சொல்வார்கள். அந்த வகையில் "யுவர்ஸ் சேம்ஃபுல்லி" என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்கிவருகிறார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது.   ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது.  



தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது.

 மான்ஸ்டர், பண்ணையாரும் பத்மினியும், மாஃபியா ஆகிய படங்களின் ஒளிப்பதிவில் தனது தனித்திறமையைக் காட்டி இருந்த கோகுல் பினாய் படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான மாஃபியா படத்தில் இவரது ஒளிப்பதிவு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது

மிஸ்ட்ரி திரில்லர் படங்களுக்கு இசை மிக முக்கியம். அதைப் பூர்த்தி செய்ய இருக்கிறார் சதீஷ் ரகுநாதன்.

குற்றம் கடிதல், மகளிர் மட்டும், ஹவுஸ் ஓனர் ஆகியப்படங்களின் எடிட்டர் CS பிரேம் குமார் எடிட்டராக பணியாற்றுகிறார்.
கலை இயக்குநராக மரகத நாணயம், சிக்ஸர் ஆகிய படங்களின் ஆர்ட் டைரக்டர் ராகுல் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரில்லர் மற்றும் இன்ட்ரஸ்டிங் அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்ததும் துவங்க இருக்கிறது.

No comments:

Post a Comment