Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Thursday 28 May 2020

ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில்

ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் - கூத்துப்பட்டறையிலிருந்து மீண்டும் ஒரு நாயகன்.

ஆர்பன்னீர்செல்வம்  இயக்கி வரும் படம் நான்தான் சிவா.,N. லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதன் படபபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடைபெற்றது. திருச்சியில் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இப்படத்தின் இறுதி கட்ட காட்சி படமானது. வில்லன் பிரசாத் நாராயண் உடன் நாயகன் வினோத் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதற்காக ஏற்கனவே ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனிடம் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார்.அதன்படி, இப்படத்தின் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் அமைத்த காட்சியில் சிறப்பாக நடித்தார் . மூன்றாம் நாள் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நாயகன் வினோதுக்கு எதிர்பாரா விதமாக கையில் முறிவு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.அதன் பின்பு ஐந்து மாதங்கள் கழித்து தான் பட பிடிப்பில் வினோத் கலந்து கொண்டார். மீண்டும் அந்த ஸ்டண்ட் காட்சி ஆறுநாட்கள் படமாக்கப்பட்டது. வினோத் ஸ்டண்ட் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்தது போல் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். பசுபதி,விமல், விதார்த், விஜய்சேதுபதி இவர்களை தொடர்ந்து வினோதும் கூத்துப்பட்டறை மாணவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார். 





'ரேணிகுண்டா' இயக்கிய ஆர்.பன்னிர்செல்வம் இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜயசேதுபதி நடித்த  'கருப்பன்' போன்ற படங்களுக்கு பிறகு இப்பொழுது  'நான்தான் சிவா' படத்தை இயக்கி வருகிறார்.

ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை.
கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு - என்.சுபாஷ் சந்திரபோஸ்

இயக்குநர் - ஆர்.பன்னீர் செல்வம்

ஒளிப்பதிவு - பி.ராஜசேகர்

சண்டைப் பயிற்சி - ராஜசேகர்

நடனம் - தினேஷ்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

பாடல்கள் - யுகபாரதி

இசை - டி.இமான்

கலை - சீனு

தயாரிப்பு மேலாளர் - ஜி.ஆர்.நிர்மல்

படத்தொகுப்பு - ஆண்டனி

No comments:

Post a Comment