Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Wednesday 27 May 2020

கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில்  தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து மார்ச் 31 முதல் தேசிய ஊரடங்கு அமுல்படுத்தபட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும்
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது

தமிழகத்தில் இயங்கிவந்த 1000 திரையரங்குகள் அதில் பணியாற்றி வந்த சுமார் 30000ம் தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியாக உள்ளது

திரைப்பட தொழில், அதனை சார்ந்து இருக்கும் திரையரங்குகளின் எதிர்காலம் பற்றி இந்தியா முழுவதும் அந்தந்த மாநில திரைத்துறை பிரபலங்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியை"Theatre world"
என்கிற அமைப்பு நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொரோனா பாண்டமிக்குக்கு மத்தியில் தமிழ்நாடு திரையரங்குகள் எதிர்காலம்
என்கிற தலைப்பில் விவாதம் ஒன்றை 27.05.2020 இன்று மாலை
5 மணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது

இவ்விவாதத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்
செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம்
திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்
D.C.இளங்கோவன்,
வேலூர் சீனிவாசன்
ஆகியோர் பங்கேற்கும் விவாதத்தில்"MODERATED" முறையில் நான்
(R. இராமானுஜம்) பங்கேற்க உள்ளேன்

முழுக்க இணைய வழியில் நடைபெற உள்ள விவாதத்தை காண விரும்புவோர் இதனடியில் இணைக்கப்பட்டுள்ள தொடர்பில் பதிவு செய்து காணலாம்

No comments:

Post a Comment