Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Friday, 22 May 2020

சத்தமில்லாமல் தன் அம்மாவின்

சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் வறுமைக்கு உடப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால்.









நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள்,
திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,
தூய்மைப் பணியாளர்கள், ரயிலில் பயணம் செய்பவர்களிடம் சிறு வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார்


இதற்கான ஏற்பாடுகளை தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன்  செய்துவருகிறார், அதுமட்டுமின்றி y5விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும்  நிவாரண உதவி வழங்கி உள்ளார்கள் மற்றும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment