Featured post

கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

 *'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு*  தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரப...

Monday, 11 May 2020

தேசிய மேம்பட்ட கணினி திட்டத்தில் (National Supercomputing Mission)

தேசிய மேம்பட்ட கணினி திட்டத்தில் (National Supercomputing Mission) 
இணைகிறது திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகம்: கணினியானது விரைவில் 
நிறுவப்படும் எனத் தகவல்

இந்திய அரசின் தேசிய மேம்பட்ட கணினி திட்டத்தில் திருச்சி தேசிய 
தொழிநுட்பக்கழகம் இணைந்துள்ளது. இந்த அமைப்பு கணக்கீட்டுச் 
சிக்கல்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப 
ரீதியில் உதவுகிறது. இந்த அமைப்பிற்கு கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்ட 
முன்மொழிதலின் அடிப்படையிலும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் 
தொழில்நுட்பத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் 
ஒப்புதலின் பேரில் ரூபாய் 17.11 கோடி மதிப்பிலான மேம்பட்ட கணினியானது 
புனே CDAC அமைப்பின் சார்பில் 2 கோடி செலவில் கல்லூரியில் 
நிறுவப்படவுள்ளது. 70:30 என்ற விகிதத்தில் CPU மற்றும் GPU கொண்டுள்ள 
இக்கணினியாது, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ்நிலை கற்றல் துறைகள் 
வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் 
ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் மேம்பட்ட கணினி நிறுவப்படும் முதல் தேசிய தொழில்நுட்பக்கழகம் 
என்ற பெருமையைத் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகம் பெற்றுள்ளது. 
இத்திட்டத்தைச் செயல்படுத்த பெரும்பங்காற்றிய கணினித் துறையின் தலைவர் 
டாக்டர் ராம்கல்யான் தலைமையிலான அணி பற்றும் செயற்குழு உறுப்பினர்களான 
கல்லூரி முதன்மையாளர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) டாக்டர். உமாபதி 
மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் டாக்டர். 
ராஜேஸ்வரி ஸ்ரீதர் ஆகியோருக்கு கல்லூரி இயக்குனர் டாக்டர். மினி ஷாஜி 
தாமஸ் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சமீபத்தில் பிரதமரின் 
புத்தாய்வுத் திட்டத்தில் (PMRF) இணைந்த முதல் தேசிய தொழில்நுட்பக்கழகம் 
என்ற பெருமையையும் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகம் பெற்றது 
குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment