Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 29 July 2020

கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி

ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி  தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி.  படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின்  கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.




இப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,

"இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும்.  படம் பார்க்கும் போது அதை நீங்கள் உணர முடியும். மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாப்பாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு. அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்தேன். இந்த லிப்ட் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியான பின் கரியரில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்றார்


No comments:

Post a Comment