Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Thursday, 17 September 2020

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் " அருவா சண்ட "

 சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான்  " அருவா சண்ட "

தயாரிப்பாளர் வி.ராஜா

அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாடல்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் " அருவா சண்ட " கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில்  சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, இவர்களுடன் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆதிராஜன்
பாடல்கள்  - கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு - சந்தோஷ் பாண்டி
இசை - தரண்
எடிட்டிங்  - V.J.சாபு ஜோசப்
கலை  - சுரேஷ் கல்லேரி
ஸ்டண்ட்  - தளபதி தினேஷ்
நடனம் - தீனா.

கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், தரண் இசையில்,  இந்த படத்தில் இடம்பெறும்  இரண்டாவது வீடியோ பாடலான " இவ  சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி " என்னும் கலகலப்பான குத்து பாடலை   தயாரிப்பாளர் V.ராஜா வெளியிட்டுள்ளார்.

பட்டி தொட்டியெங்கும் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு தீனா நடனம் அமைத்துள்ளார், எம் பேரு மீனா குமாரி என்ற ஹிட் பாடலை பாடிய அனிதா இந்த பாடலை தனது கிக்கேற்றும் குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.  இதன் மூலம் திரையரங்குகள் திறந்த பிறகு படம் உடனே வெளியாகும் என்ற நபிக்கையை ஏற்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் V.ராஜா.


















இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவும் சுப்ரா கோஷ் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

கபடி, கௌரவக் கொலை  பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும். சாதியப் பிரச்சனைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் இப்படம் தணிக்கை அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு " யூ " சான்றிதழ் பெற்றுள்ளது.

தனது முதல் தயாரிப்பிலேயே துணிச்சலாக  சமூக ரீதியான பொது கருத்துள்ள படமாக எடுத்துள்ளதாக படத்தை பார்த்த மூத்த தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்  தயாரிப்பாளர் வி.ராஜாவை பாராட்டி வருகிறார்கள்.
சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அருவா சண்ட  அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவு பெற்றுள்ளது திரையரங்குகள் திறந்த உடன் படம் வெளியாகும் என்று நபிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் V.ராஜா.

No comments:

Post a Comment