Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 30 September 2020

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான

*பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்*

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு பிரிந்தார். அவரது மரணத்திற்கு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

1

மலேசியாவின் முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் திரு ஒய்பி. எம் குலசேகரன் அவர்கள், எஸ்.பி.பியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ;

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் பொழுதுபோக்கு துறையில் ஒரு மிகச்சிறந்த கலைஞன். ஈடு இணையில்லாத திறமையான பாடகர். தனது அற்புதமான பாடல்களால் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களை வசியம் செய்யும் நிஜமான வரம் பெற்றவர். அவரது இசைப்பயணத்தில் நாற்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார். அவர் நம்மைவிட்டு திடீரென பிரிந்துபோனது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய, வருத்தம் தரக்கூடிய மிகப்பெரிய இழப்பு..

அவரது பாடல்களை நாம் நேசிப்பதன் மூலம் அவரது குரல் பல்லாண்டு வாழும்..

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்..”

என்று குறிப்பிட்டுள்ளார் 

ஒய்பி. எம் குலசேகரன்
மலேசியாவின் முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர்

No comments:

Post a Comment