Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Monday, 4 January 2021

திரௌதி படத்தின் இயக்குனர் மோகன்

 திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் " ருத்ர தாண்டவம் " படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.


G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" 

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.



இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.


திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா

இந்த படத்தையும்  உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு  செய்கிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment