Featured post

Vaa Vaathiyar Movie Review

Vaa Vaathiyaar Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumar...

Thursday, 14 January 2021

சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே

 *சினிமா ஆளுமைகளான  ஹொம்பாளே  பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் 'சலார்' திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது*


திரு. விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு  வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சுவாரஸ்யமான வகையில், தகவல்கள் உண்மையாக இருந்தால் அவர் மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் தோன்றுவார்.



தற்போது வரும் செய்திகளின் படி, 'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இம்மாதம் 15-ம் தேதி, 11 மணியளவில்  படத்தின் பூஜையை நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சலார் படக்குழுவினர் கலந்து கொள்ளும் படப்பூஜை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாக்டர். சி.என். அஸ்வத்நாராயண் - கர்நாடக துணை முதல்வர், முன்னணி இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யாஷ்  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.


இது குறித்து பிரபாஸ் கூறுகையில், "ஹைதராபாத்தில் படப்பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பைத் தொடங்கவும், ரசிகர்களுக்கு என்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தவும் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்கிறார்.

No comments:

Post a Comment