Featured post

Yellow Movie Review

Yellow Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poorni...

Friday, 15 January 2021

இன்று பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை | Papillon

இன்று பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள படம் பாப்பியோன். இதன் இசை வெளியீட்டு விழாவில் நக்கீரன் கோபாலும் தயாரிப்பாளர் கே.ராஜனும் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தின் கதை வசனம் எழுதி தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆராராஜா.இவர் சிறந்த ஓவியருமாவார் பெரிய வெற்றிப்படமான சந்திரமுகி படத்தின் சந்திரமுகி உருவ படத்தை இவர்தான் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விழாவில் ஆராராஜா வரவேற்றார்.நக்கீரன் கோபால்,மதியழகன்,கே,ராஜன், டாக்டர் தாயப்பன் நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் சாம் மோகன்,பட நாயகி சுவேதா, பாடகி ரியாசுஷ்மா ,ஜாகுவார் தங்கம் பாடகர் ஐயாத்துரை, நடிகை கோமல் சர்மா பேசினர்.


கே.ராஜன் பேசும்போது குறிப்பிட்டதாவது: என் தமிழனின் திறமையை இந்தத் திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அதன்பிறகு என் சகோதரர்கள் தெலுங்கு,கர்நாடகா,மலையாள சகோதரர்கள் வரட்டும்.இந்த மேடையிலே எல்லோரும் தமிழில் பேசினார்கள்.அது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.


கதாநாயகர்களிடம் ஒரேயொரு கோரிக்கை வைக்கிறேன்.நீங்கள் நடிக்கும் படம் வெற்றி பெறும் தயாரிப்பாளர்கள் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் நீங்கள் உங்கள் சம்பளத்தை படம் முடிந்த பிறகு வாங்கிக்கொள்ளுங்களேன்.


ஆந்திராவில் எல்லோரும் சம்பளத்தை படம் முடிந்த பிறகு வாங்கிக்கொள்வதுடன் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.அந்நிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.அப்படி வந்தால்தான் தமிழ் திரை உலகம் உருப்படும்! என்று கூறினார்.


நக்கீரன் கோபால்: இவர் தனது பேச்சில் குறிப்பிட்டதாவது, இந்த படத்தின் இயக்குனர் சமூகப்பிரச்சினையை வைத்து படம் எடுத்து இருக்கிறேன் என்றார்.அதனால் இந்த விழாவிற்கு வந்தேன். 2019 மார்ச்-ஏப்ரலில் கோயம்புத்தூரில் இருந்து எனது தம்பி (நிருபர்) 2 சி.டி. எடுத்து இருக்கிறேன் அனுப்படுமா என்று தொலைபேசியில் கூறினார், தம்பி லெனினுக்கு(உதவி ஆசிரியர்) அனுப்பிவைக்கச் சொன்னேன். அனுப்பியிருந்தார்.


இந்த துறையில் எத்தனையோ அதிர்ச்சியான சம்பவங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தச் சி.டி.க்களை பார்த்ததும் மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானோம்.


தன் நண்பனின் தங்கையை காரில் கூட்டிப்போகிறான்.இடையில் இரண்டு மூன்றுபேர் காரில் ஏறிக்கொள்கிறார்கள், இடையில் ஒருவன் வந்து முன்சீட்டில் ஏறிக்கொள்கிறான்.அவன் கையில் (காஸ்ட்லி) விலை உயர்ந்த செல்போன் வந்திருக்கிறான்.அதில் துல்லியமாக படம் பிடிக்கலாமாம்.


திடீர் என்று பின் சீட்டில் இருந்தவன் அந்த பெண்னின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறான்.அதை முன் சீட்டில் இருந்தவன் படம் எடுக்கிறான்.இப்படித்தான் அவர்கள் செய்வார்களாம், அதைவைத்து மிரட்டி பணிய வைப்பார்கள்.


பெரிய காவல்துறை அதிகாரிகள் மிரட்டினார்கள்.என்னிடம் உள்ள சி.டிக்களை கொடுத்துவிட வேண்டும் என்றனர், என்னிடம் ஏராளமான சி.டிக்கள் இருப்பதாக கூறினார்கள்.என்னிடம் வெறும் 4 சி.டி.க்கள் தான் உள்ளன.


இவாறு கோபால் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment