Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Friday, 1 January 2021

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் !

 தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் ! 

இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து வீட்டு விஷேசங்களில் முதலிடம் பெறுபவை. இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் D.இமான். இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி   ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது. 


இது குறித்து இசையமைப்பாளர் D.இமான் கூறியதாவது...


இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியி


ன் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான்  “DI Productions” எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி   ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் ஆடியோ பங்குதாரராக இணைந்திருக்கும் Divo Music நிறுவனத்தாருக்கு எனது நன்றி. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம்.  அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்

No comments:

Post a Comment