Featured post

*A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus,

 *A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus, the Conv...

Thursday, 11 March 2021

48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும்

 48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான  இதயங்களை வென்ற “What the Uff” பாடல் ! 


Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff”  பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது. உலக மகளிர் தினத்தை  கொண்டாடும் பொருட்டு, சிறப்பு பாடலாக வெளியான இப்பாடல், ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. 






ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஹரிகா நாராயணன் பாடியுள்ள இப்பாடலை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இப்பாடலின் வரிகளை 

கு. கார்த்திக் எழுதியுள்ளார். நெல்சன் வெங்கடேசன், கற்பகம், சாருமதி, தீபிகா தியாகராஜன், வைஷ்ணவி கண்ணன் பின்னணியில் குரல் தந்துள்ளனர். 


இப்பாடலின் வரிகள் தற்போதைய நவீன காலத்தில், ஒரு பெண் மீது விழும் முன்முடிவுகளை, அவளை ஒரு கோட்டுக்குள் அடைப்பதை

அழுத்தமாக விமர்சிப்பதாக அமைந்துள்ளது. 




சுயாதீன கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் அழகான பாடல்களை Think Originals தொடர்ச்சியாக தந்து வருகிறது. “What the Uff” பாடல் அதன் மகுடத்தில் மற்றுமொரு சிறகாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment