Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Wednesday, 31 March 2021

உன் கட்சிக்காரன் ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டான்!

 # உன் கட்சிக்காரன்

ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டான்!



ஏன் உன் கட்சிக்காரன்

இரண்டாயிரம் கோடி கொள்ளையடிக்கவில்லையா?


# உங்கள் ஆட்சியில்

நிலமோசடி தலைவிரித்தாடியது


ஏன் உங்கள் ஆட்சியில்

நில அபகரிப்பு நடக்கவில்லையா?


# உங்கள் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து!

 உங்கள் ஆட்சியில் ரவுடிஸம் !


# உங்கள் கட்சிகாரர்கள் ஆபாசமாக பேசுகிறார்கள்!

ஏன் உங்கள் கட்சியில் அவர் அசிங்கம் அசிங்கமாக பேசவில்லையா?


# உங்கள் ஆட்சியில் லஞ்சம் கொடிகட்டிப் பறந்தது!

ஏன் நீங்கள் ஊழலில் ஊரிப்போகவில்லையா?


# நீங்கள் தமிழினத் துரோகிகள்!

ஏன் நீங்கள் தலைமைக்கே துரோகம் செய்யவில்லையா???


# உங்கள் ஆட்சியில் கற்பழிப்பு அதிகம்!

ஏன் உங்கள் அரசியல் பெரும்புள்ளியே அவளை கற்பழிக்கவில்லையா?


# உங்கள் ஆட்சியில் பொய்வழக்கு போட்டு என் தலைவரையே சிறையில் அடைத்தீர்கள்!


ஏன் சூழ்ச்சி செய்து எங்க தலைவரை

நீங்கள் சிறையில் போடவில்லையா??


இப்பொழுது இந்தமாதிரி விவாதங்கள்தான் அரசியலில் நடைபெறுகிறது!


இந்தமாதிரி விவாதங்கள் இருக்கும்வரை

இந்தநாடு உருப்பட  வாய்ப்பில்லை


நாங்கள் சரியானவர்கள்!

நாங்கள் நேர்மையானவர்கள்!

நாங்கள் ஊழல் அற்றவர்கள்

நாங்கள் நிலஅபகரிப்பு, நிலமோசடி செய்யாதவர்கள்!

நாங்கள்  பெண்களை மதிக்கக்கூடியவர்கள்!

இந்தமாதிரி வார்த்தைகள் வந்தால்

ஆரோக்கியமாக இருக்கும்!

                                     *பேரரசு*

No comments:

Post a Comment