Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Wednesday 24 March 2021

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில்

 முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் வாக்காளர்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.

முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் மையப்பள்ளி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "ரங்கோலி" நிகழ்ச்சி ஒன்றினை, 2021 ஏப்ரல் 23  செவ்வாய்க்கிழமை அன்று

ஏற்பாடு செய்திருந்தது. 

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தொற்றுநோய்களுக்கு இடையே 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து   பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ,7000 சதுர அடி பரப்பளவு கொண்ட ரங்கோலி வண்ணக் கோலமானது மிகப்பிரம்மாண்டமாக வரையப்பட்டது.  '"வாக்களிப்பது உங்கள் உரிமை--உங்கள் சக்தி'" என்ற வலுவான செய்தியை  இது வலியுறுத்தியதுடன்   தேர்தலில் பங்கேற்று 

வாக்களிப்பதன் மூலம்

 சமுதாயத்தில் நாம் செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமையானது நிறைவேற்றப்படும் என்ற அடிப்படை உண்மையையும் இந்த



நிகழ்ச்சி பிரதிபலித்தது. .

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேலம்மாள் பள்ளி பொதுமக்களிடம் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில் வாக்காளர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளைப் பின்பற்றித் தங்களது ஜனநாயகக் கடமையான ஓட்டினை வருகிற,

  2021 ஏப்ரல் 6 ஆம் தேதி

தவறாமல் செலுத்த முன்வர வேண்டும். நன்றி.


விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: 8056063519

No comments:

Post a Comment