Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Monday, 29 March 2021

முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட

 முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லரை, சென்னையில் உள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில், நடிகைகள் அக்ஷரா ரெட்டி, நிவேதிதா சதீஷ், உபாசனா மற்றும் நடிகர் வைபவ் 

ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில் நடைபெற்ற அறிமுக விழாவில், புகழ்பெற்ற ஃபேஷன் வடிவமைப்பாளர் கருண் ராமன் தலைமையில், இளம் மாடல் அழகிகளின் கண்கவர் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதனையடுத்து வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸின் நிர்வாக இயக்குனர் வெங்கட் தேஜா, புகழ்பெற்ற மாடல் அழகியும் நடிகையுமான அக்ஷரா ரெட்டி, நடிகைகள் நிவேதிதா சதீஷ், உபாசனா மற்றும் நடிகர் வைபவ், ஆகியோர் புதிய ஜீப் ரேங்லரை அறிமுகம் செய்து வைத்தனர்.





















































இந்த ஜீப் ரேங்லர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அமெரிக்காவிற்கு பிறகு இத்தகைய எஸ்.யூ.வி. ஜீப்பை தயாரிக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும். இந்த ஜீப் ரேங்லரானது மண், பாறை மற்றும் பனி என அனைத்து வகையிலான சவால்கள் நிறைந்த பாதைகளிலும் சிரமமின்றி எளிதாகச் செல்லக் கூடியது. ROCK-TRAC 4x4 ரூபிகான் அமைப்பைக் கொண்ட இந்த ஜீப் ரேங்லர், 4:1 என்ற குறைந்த கியர் விகிதத்தைக் கொண்டுள்ளது. இதனால் ரேங்க்லர் ரூபிகானை அதிக கட்டுப்பாட்டுடன் குறைந்த வேகத்தில் வலம் வர அனுமதிக்கிறது. மேலும், சக்கரங்களுக்கு இடையிலான முறுக்கு விசையையும் அதிகரித்து ரூபிகானின் தரநிலையை உயர்த்துகிறது. அதேபோல் இதில் பொறுத்தப்பட்டுள்ள ஃப்ரீடம் டாப் மாடுலர் ஹார்டு டாப், இலகுவான மற்றும் நீக்குவதற்கு எளிதான மூன்று பாகங்களைக் கொண்டது. ஒவ்வொரு ஹார்டு டாப் ரேங்க்லருடனும் அதனை எளிதில் அகற்றுவதற்கு தேவையான கருவி சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ஜீப் ரேங்லரை வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ் முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் ஜீப் ஷோரூமும், காட்டுப்பாக்கத்தில் விற்பனை நிலையமும் கொண்டுள்ள வி.டி.கே. ஆட்டோமொபைல்ஸ், இந்த ஆண்டுக்குள் சென்னை ஓ.எம்.ஆரில் புதிய உலகத்தரம் வாய்ந்த விற்பனை, சேவை மற்றும் உதிரிபாகங்கள் ஆகிய வசதிகளுடன் தனது செயல்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரமான ஜீப்களை தங்களது வாடிக்கையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என நம்புகிறார்கள்.

No comments:

Post a Comment