Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Tuesday, 30 March 2021

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம்

 நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம்   “கார்பன்” !


நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.









இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் ( ஒண்டிகட்ட படப்புகழ் ), பாவ்லின் ஜெஷிகா ( வாய்தா படப்புகழ் ) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்பே கூறியதுபோல் குப்பை தொட்டி, குப்பை பொருட்கள், குப்பை லாரி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்திருக்கும். படத்தின் கதை 6 இரவுகள் மற்றும் 7 பகலில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. புதுமையான களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் BFA கலை  இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார்.  கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது.
 
Benchmark Films சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஶ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment