Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Saturday, 1 May 2021

கொரனாவின் கொடிய முகம் காட்டும்

 கொரனாவின் கொடிய முகம் காட்டும் காலத்தில் நாம் தெரிந்த பலரை தினம் இழக்கிறோம். நம் மனது என்னடா வாழ்க்கை இது?


என நினைக்க தோன்றுகிறது.  மக்கள் ஓரு புறம் தடுப்பூசிக்கும், ஆக்ஸிஜன்னுக்கும் அலைவதை பார்க்கும் போது இன்னும் மனது வலிக்கிறது. சரி இதிலிருந்து நாம் தாம் மீண்டு வர வேண்டும்.


தனி மனித ஒழுக்கம் ஒரு சமுதாயத்தையே மாற்றும்., நாம் வேலைக்கு போகும் போது மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளீயை பின் பற்றி

நடந்தால் அது நமக்கும் நாட்டுக்கும் நல்லது.


முடிந்தவரை மற்றவரிடம் கோவிட் பற்றி பேசாமல் வேறு விஷயம் பேசுதல் இன்னும் மனதுக்கு நல்லது. செய்தி சேனல்களை ஒரளவு பார்த்து விட்டு  வேறு இசையோ, அல்லது நல்ல நகைச்சுவை

சேனலோ வீட்டில் ஒட விடுவது வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி தரும். 


நல்ல புத்தகம் படித்து விட்டு இரவில் தூங்குவது இன்னும் சிறப்பு.


நாம் இருக்கும் இடத்தை முதலில் நல்ல பாசிட்டிவ் வைப்ரேசனாக வைத்து கொள்வது  மிக மிக அவசியம்.


தெரிந்தவர்கள்  உறவினர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அவசியம் அவர்களுக்கு நம் நம்பிக்கையான ஆறுதல் வார்தைகள் அவசியம் கூற வேண்டு,ம்.  


பயம் தான் ஓரு நோயை மிக பெரிய நோயாக மாற்றுகிறது,  ஆதலால் பயம் இல்லாமல் நம்மை நாம் காப்பாற்றி கொண்டாலே

சமுதாயத்தில் நோய் பரவும் சக்தி குறையும்.


உங்களிடம் நம்பிக்கையாய் பேசுபவர்களிடம் மட்டும் அதிகம் பேசுங்கள், வதந்தி பரப்புவோர், உலகம் அழிய போகிறது என்று நம்பிக்கை இல்லாமல் பேசுபவர்களிடமிருந்து விலகி

நில்லுங்கள். 


இதுவும் ஒர் யுத்தம் தான். நாமே நம்முடன் போரிட்டு கொள்ளும் யுத்தம்.  மாஸ்க் அணியாமல்,  சமூக இடைவெளி இல்லாமல், நம்மை வீட்டுக்கு வெளியே சுற்ற சொல்லும் நம் மனது.


நம் அறிவு அதற்கு இடம் கொடுக்காமல் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பேசுவது,  தேவை இல்லாமல் வெளியே வராமல் இருப்பது என இருந்தால் நம்மை நாமே காப்பாற்றி கொள்ளலாம்.


நல்ல விஷயங்களிள் கவனம் செலுத்துவோம்

அனைவரும் நலமாக வாழ கடவுளிடம் பிராத்திப்போம்.


- Shriram Padmanabhan

No comments:

Post a Comment