Featured post

The 23rd edition of the Asia Masters Athletics Championships held from 5th to 9th November 2025, in the vibrant city

The 23rd edition of the Asia Masters Athletics Championships held from 5th to 9th November 2025, in the vibrant city of Chennai, Tamil Nadu,...

Monday, 14 June 2021

இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த

 இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் இயங்காத நிலையில் உலகம் முழுக்க OTT  தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.


அரசு அறிவித்த லாக்டவுன் காலங்களில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சினிமா விரும்பிகள் உள்ளூர் தொடங்கி உலகத்திரைப்படங்கள் வரை பார்த்துவிட்டு, கையோடு அந்தப் படங்கள் அல்லது வெப் சீரிஸ் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விலாவாரியாக எழுதுவதை முகநூல் முழுக்கப் பார்க்க முடிகிறது.



அதிலும் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தாங்கள் பார்த்த படத்தின் கதை பற்றியும், அதன் களம், கதாபாத்திரங்கள் என்று மிக நுட்பமாக சொல்லுவதில் பலரது கவனத்தையும் ஈர்ப்பவர் இயக்குனர் ஜான் மகேந்திரன். இவரது விமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு எந்த மொழிப்படமாக இருந்தாலும் சப் டைட்டில் இல்லாமலே படம் பார்க்கலாம்; அந்தளவுக்கு விலாவாரியாக இருக்கும் இவரது விமர்சனம்.


அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வரும் அருள்தாஸ் பற்றி ஒரு விமர்சனத்தை சிலதினங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தார். 

அதில் மலையாள திரைப்படங்கள் பார்க்கும் போது, அதில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும்  ஒவ்வொருவரும், நடிகர்களாக தெரியாமல் மண்ணின் மனிதர்களாக தெரிவார்கள். இப்படி எதார்த்தமாக நடிக்கும் நடிகர்கள் இங்கு மிக குறைவு....அப்படி மிக சிலரில் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அருள்தாஸ் கொடுத்த கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடிக்க கூடிய நடிகர் லாக்டவுனில் இவர் நடித்த நிறைய திரைப்படங்களை பார்க்க நேர்ந்தது இவர் நடித்த அனைத்து கதாபாத்திரத்தையும் மிக இயல்பாகவும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார் குறிப்பாக சமீபத்தில் இவர் நடித்த வெப்சீரிஸ் நவம்பர் ஸ்டோரி'ஸ் இவரின் இயல்பான நடிப்புக்கு சான்று...சபாஷ் Arul Dass.என்று பாராட்டியுள்ளார்


இயக்குனர் மகேந்திரன் அவர்கள் உலகமே வியந்து பார்க்கிற இயக்குனர். புதிதாக சினிமாவுக்கு வருகிற கலைஞர்கள் கவனத்திற்குரிய படைப்பை கொடுத்திருந்தால் எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களை அழைத்து மனதார பாராட்டுவார். அவர் வாரிசான

இயக்குனர்  ஜான் மகேந்திரனும் திறமையான கலைஞர்களை பாராட்டுவதில் தந்தையின் வழியில் நடக்கிறார் என்பது மகிழ்ச்சியே...

No comments:

Post a Comment